மருத்துவமனையில் 500 படுக்கைகள்தான் இருக்கு.. ஆனா 5 ஆயிரம் பேர் செல்கிறோமே நியாயமா?.. நடிகர் சிவக்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 5 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு சென்று என்னை மட்டும் காப்பாத்தவில்லையே என மருத்துவர்களை கண்டபடி திட்டி வருகிறோமே இது நியாயமா என நடிகர் சிவக்குமார் கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கொரோனா அறிகுறிகளில் வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைவலி என அறிகுறிகள் தெரிந்தால் வீட்டிலேயே வைத்தியம் பார்ப்பதை விட்டுவிடுங்கள். மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லுங்கள்.

ஆலோசனை

ஆலோசனை

மருத்துவரின் ஆலோசனையின்படி வீட்டிலேயே என்றால் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கும் கொரோனா வரும். திறந்தவெளியில் குழந்தைகளை விளையாட விடாதீர்கள். கடந்த ஒரு ஆண்டாக மருத்துவர்கள் குடும்பம், குழந்தைகளை மறந்து நம் உயிரை காக்க கொரோனா சூழலில் பணியாற்றி வருகிறார்கள்.

உயிர் தியாகம்

உயிர் தியாகம்

100-க்கும் மேற்பட்டவர்கள் உயிர் தியாகம் செய்துள்ளார்கள். மருத்துவமனையில் 500 படுக்கைகள்தான் உள்ளன. ஆனால், 5000 பேர் ஒரே நேரத்தில் சென்று என்னை மட்டும் காப்பாத்தலையே என்று தாறுமாறாக திட்டுறோமே இது நியாயமா?

கொரோனா விதிமுறைகள்

கொரோனா விதிமுறைகள்

அதனால், கொரோனா விதிமுறைகளை கடைப்பிடியுங்கள். தடுப்பூசி போட்டுக் கொண்டால் கொரோனா நம்மை கடுமையாக தாக்காது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தேவையில்லாமல் வெளியே யாரும் சுற்ற வேண்டாம். முழுமையான ஊரடங்கை கடைபிடித்து, தடுப்பூசியும் செலுத்திக் கொண்டால் கொரோனாவிலிருந்து விடுபடலாம்.

கொரோனா

கொரோனா

நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருந்து கொரோனாவை தடுப்போம் என்று பேசி விழிப்புணர்வு ஏற்படுத்திய சிவக்குமார் மூச்சுப்பயிற்சியை எப்படி செய்ய வேண்டும் என செயல்விளக்கமும் அளித்துள்ளார். மூச்சுப்பயிற்சி செய்தால் சுவாசம் சீராகும் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+