எல்லா கோட்டையும் அழிங்க..என்னது எனக்கு ஓட்டு இல்லையா? ஷார்ப்பாக வந்து ஷாக் ஆன சூரி! என்னாச்சு?
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தான் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியவில்லை என வாக்குச்சாவடி வரை சென்ற நடிகர் சூரி ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததாக வேதனையுடன் தனது பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்
18வது மக்களவைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.

ஒரு சில இடங்களில் மட்டும் வாக்கு இயந்திரத்தில் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்ட போதும் உடனடியாக அது சரி செய்யப்பட்டு தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
விறுவிறு வாக்குப்பதிவு: முதல் தலைமுறை வாக்காளர்களும் மூத்த குடிமக்களும் கூட ஆர்வத்துடன் தேர்தலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்வதை பார்க்க முடிகிறது. மேலும் தமிழக அரசியல் கட்சி பிரபலங்களை போல நடிகர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தவெக தலைவரும் நடிகருமான விஜய், நடிகர் அஜித் குமார், சிவகார்த்திகேயன், பிரபு, ஜெயம் ரவி, நடிகைகள் திரிஷா, குஷ்பூ உள்ளிட்ட பலரும் காலை முதலே தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
நடிகர் சூரி: இந்த நிலையில் தான் வாக்களிக்க சென்ற போதும் தனது ஜனநாயக கடமையை ஆற்ற முடியாமல் இருப்பது மிகுந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாக குற்றம் சாட்டி நடிகர் சூரி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். தற்போது நடந்துவரும் நாடாளுமன்ற தேர்தலில் வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிப்பதற்காக நடிகர் சூரி தனது மனைவியுடன் சென்றார். அவரது மனைவி வாக்களித்து நிலையில் வாக்காளர் பட்டியலை சரிபார்த்த தேர்தல் அதிகாரிகள் அந்த பட்டியலில் நடிகர் சூரியின் பெயர் விடுபட்டிருப்பதாக தெரிவித்தனர்.
மனைவிக்கு அனுமதி: நடிகர் சூரியின் மனைவியின் பெயர் பட்டியலில் இடம் பெற்று இருக்கும் நிலையில் அவர் மட்டும் வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் அனுமதித்த நிலையில் நடிகர் சூரியை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்த நடிகர் சூரி வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் .
வீடியோவில் வேதனை: 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக தான் வாக்களிக்க வந்ததாகவும், ஆனால் வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதாகவும்.. இதனால் தான் வாக்களிக்க முடியாமல் போனது வேதனையையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாகவும், கடந்த தேர்தல்களில் வாக்களித்து நிலையில் தற்போது ஏன் தனது பெயர் விட்டு போனது, இது யாருடைய தவறு என தெரியவில்லை. இருந்தபோதும் 100% வாக்குப்பதிவு நிறைவேற்ற முடியவில்லை ஜனநாயக கடமையை ஆற்ற முடியவில்லை என்ற வேதனையோடு இருந்தாலும் அனைவரும் வாக்களித்து 100% தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்வதாக அந்த வீடியோவில் நடிகர் சூரி தெரிவித்துள்ளார். சூரி மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தங்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களும் புகார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications