1 கிராம் ரூ.12,000.. Gpay மூலம் சிக்கிய ஸ்ரீகாந்த்! 4.72 லட்சத்துக்கு போதைப்பொருள் வாங்கியது அம்பலம்
சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருளை 1 கிராம் ரூ.12 ஆயிரத்துக்கு வாங்கியதாகவும், GPay மூலம் ரூ.4.72 லட்சம் கொடுத்து போதைப் பொருளை வாங்கி உள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஸ்ரீகாந்த்திடம் மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில் அவர் கொக்கைன் போதைப்பொருளை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் 4.72 லட்சம் ரூபாய்க்கு Gpay மூலம் கொக்கைன் வாங்கியதையும் போலீசார் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதைப்பொருள்
கடந்த மாதம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் ஏற்பட்ட தகராறில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிரசாத் மீது பண மோசடி, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் எழுந்தன. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரிடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வாங்கியதாக தகவல் வெளியானது.
இந்த தகவலின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்திடம் சென்னை நூங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அவர் போதைப் பொருள் பயன்படுத்தினாரா என்பதை உறுதி செய்ய ரத்த மாதிரிகள் பெறப்பட்டது. ஸ்ரீகாந்த்திடம் ரத்த மாதிரிகள் பெறப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
ஸ்ரீகாந்த்திடம் டெஸ்ட்
கொக்கைன், மெத்தபெட்டமைன் போன்ற போதைப் பொருட்களை தொடர்ச்சியாக பயன்படுத்தியவர்களிடம் 45 நாட்கள் வரை மருத்துவ பரிசோதனை செய்யலாம். அதன்படி, ஸ்ரீகாந்திடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப் பொருள் உட்கொண்டது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்த்தை வைத்து தீக்கிரை என்ற திரைப்படத்தை எடுத்து வந்ததாகவும் அப்போது நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப் பொருள் தேவைப்படுவதாக பிரசாத் தன்னிடம் இருந்து வாங்கி சென்றதாக, போதைப்பொருள் வழக்கு ஒன்றில் கைதான பிரதீப் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
ஜி-பே மூலம் பணப் பரிவர்த்தனை
சென்னையில் உள்ள கிளப் மற்றும் பார்ட்டிகளில் இந்த கொக்கைன் போதை பொருளை ஸ்ரீகாந்த் பயன்படுத்தி வந்ததாகவும், அதனை தானே பார்த்து உள்ளதாகவும் ஒரு கிராம் கோக்கைன் 12 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு விற்பனை செய்ததாகவும் பிரதீப் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிரதீப் தந்த வாக்குமூலத்தில் நடிகர் ஸ்ரீகாந்த், பிரதீப்பிடம் 40 முறை போதைப்பொருள் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. GPay மூலம் ரூ.4.72 லட்சம் கொடுத்து போதைப்பொருளை நடிகர் ஸ்ரீகாந்த் வாங்கியுள்ளார் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஸ்ரீகாந்த்தின் செல்போனை ஆய்வு செய்த போலீசார், அவர் பிரதீப்புக்கு பணம் அனுப்பியதையும் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீகாந்த் கைது
மேலும், ரத்த மாதிரி பரிசோதனையில் நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதால் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதைப் பொருள் வழக்கில் அவரை 3வது குற்றவாளியாக போலீசார் தற்போது கைது செய்துள்ளார். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பிரதீப் மற்றும் இரண்டாவது குற்றவாளியாக கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications