கார்கில் வீரர்களுக்கு 150 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தாரா.. நடிகர் சுமன் தந்த விளக்கம்!
சென்னை: கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு தனக்கு சொந்தமான 150 ஏக்கர் நிலத்தை நடிகர் சுமன் எழுதி வைத்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் 1980, 90களில் மிகவும் பிரபலமடைந்தவர் சுமன். இவர் ரஜினி, கமலுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். இவர் நீண்ட காலத்திற்கு பிறகு சிவாஜி படத்தில் ரஜினிக்கு வில்லனாக அறிமுகமானார்.

பின்னர் கடந்த ஆண்டு கப்பார் இஸ் பேக் எனும் படத்தில் அக்ஷய் குமாருடன் சுமன் நடித்திருந்தார். அதில் திக்விஜய் பாட்டீல் எனும் கேரக்டரில் நடித்திருந்தார். இவர் கார்கில் போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு தனது 150 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்ததாக சமூகவலைதளங்களில் செய்தி பரவியது.
இந்த நிலத்தை அவர் தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் மூலம் அவர் செய்ததாகவும் தெரிகிறது. மக்கள் சுமனை பாராட்டினர். வில்லன் நடிகராக இருந்தாலும் அவருக்குள் இருந்த ஈர மனசு குறித்து சமூகவலைதளங்களில் பேசும் பொருளாக இருந்தது. அப்போது இந்த விவகாரம் குறித்து நடிகர் சுமன் விளக்கினார்.
அவர் கூறுகையில் அந்த தகவல் தவறான ஒன்று. எனது நிலம் தற்போது கோர்ட் கேஸில் இருக்கிறது. அது முடிந்தவுடன் நானே மீடியாவுக்கு அறிவிப்பேன் என்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 150 ஏக்கர் நிலத்தில் ஒரு அவுட்டோர் ஸ்டுடியோவும் ஆயுர்வேதிக் ரிசார்டும் திறக்க போவதாக அறிவித்தார்.
அதன் பின்னர் அந்த நிலத்தை கார்கில் போரில் உயிரிழந்தவர்களுக்கு தானமாக கொடுக்கவிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் சொன்னபடி நிலத்தை கொடுக்கவில்லை என்ற பேச்சு இருந்தது. இதன் பிறகு அவர் கொடுத்தாரா இல்லையா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.
இந்த நிலையில் சுமன் ஒரு படத்தின் விழாவுக்காக சென்னை வந்திருந்தார். அப்போது அவரிடம் அந்த நிலம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு சுமன் கூறுகையில், ஆமாம் நான் அந்த நிலத்தை கார்கில் வீரர்களுக்கு கொடுத்துவிட்டேன். நாம் நிம்மதியாக இருக்க அவர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளார்கள். கார்கில் போரின் போது கார்கில் ஃபண்ட் கலெக்ஷன் செய்த போது நிறைய நடிகர்கள், 1 லட்சம், 5 லட்சம் என பணம் கொடுத்தனர்.
ஆனால் எனது மனைவிதான் நிலமாக கொடுக்கலாம் என்றார். அந்த நிலம் 150 ஏக்கர். ஆனால் அங்கு நக்ஸலைட் பிரச்சினை இருந்ததால் பிறகு பார்த்துக்கலாம் என இருந்தேன். பின்னர் அந்த இடத்தை கொடுத்துவிட்டேன். அவர்கள் அங்கு கல்லூரியோ பள்ளியோ குடியிருப்போ எதை வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளட்டும். மொத்தத்தில் கார்கில் என்ற பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக அதன் ஞாபகமாக அவர்களின் தியாகத்தின் அடையாளமாக அந்த இடத்தை கொடுத்தேன். மற்றபடி நான் அரசியல் காரணங்களுக்காக இதை கொடுக்கவில்லை.
நாமெல்லாம் பார்டரில் இருக்கிறார்கள் என அசால்ட்டாக சொல்லிவிடுகிறோம். அண்மையில் நான் காஷ்மீர் சென்றேன். அங்கு மக்களை விட ராணுவ வீரர்கள்தான் சாலைகளில் அதிகம் பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் எல்லையில் நிற்காவிட்டால் எதிரிகள் உள்ளே வந்துவிடுவார்கள். இரவு நேரத்தில் கூட துப்பாக்கிச் சூடு நடந்து கொண்டுதான் இருந்தது. எனவே அவர்கள் நாட்டின் நலனுக்காகவும் மக்கள் பாதுகாப்புக்காகவும் பார்ட்ருக்கு வருகிறார்கள் என்றார். இவர் புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களிந் குடும்பத்திற்காக தன்னார்வல தொண்டு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications