வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்! அண்ணன் விஜயகாந்த் நலம் பெறுவார்! நடிகர் சூர்யா நம்பிக்கை!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வேண்டுதல்கள் விஜயகாந்தை பூரண குணமாக்கி நலம் பெற வைக்கும் என நடிகர் சூர்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விஜயகாந்தை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாவே நடையிலும் பேச்சிலும் ஏற்பட்டுள்ள சிரமத்தால் வீட்டில் முழுமையாக ஓய்வில் இருந்து வருகிறார். அவரை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்தும், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகிய இருவரும் மிகவும் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி இரவு சளி மற்றும் இருமல் பிரச்சனையால் அவதிப்பட்டதால், விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு அங்கு தொடர் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக பிரேமலதா வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை நிர்வாக பரபரப்பு மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இதனால் அரசியல் களத்திலும், சினிமா வட்டாரத்திலும் பரபரப்பு பற்றிக்கொண்டது. இதனிடையே பிரேமலதாவை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முக்கிய பிரமுகர்கள் பலரும் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து அக்கறையோடு விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யாவும் விஜயகாந்தின் உடல் நலம் பற்றி பிரேமலதாவிடம் விசாரித்தார். மேலும், விஜயகாந்த் குறித்த ஒரு பதிவையும் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு; '' அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன். கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்! அவரை பூரண குணமாக்கி நலம் பெற வைக்கும்.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். விஜயகாந்துடன் சூர்யா பெரியண்ணா என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications