உண்மை கதைகளில் சூர்யா ஆர்வம்.. அடுத்து எதை கையிலெடுக்கிறார் தெரியுமா? முக்கிய புள்ளிகள் கலக்கம்?
சென்னை: நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் 2019-இல் தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை மையமாக கொண்டு எடுக்கப்படுகிறது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வசூல் வேட்டையை நடத்தியுள்ளது. இந்த படத்தில் ஒரு சமூகத்தை உயர்த்துவதற்காக இன்னொரு சமூகத்தை அவதூறாக பேசுவது நியாயம் இல்லை என வன்னியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
இந்த படத்தில் கூறப்பட்ட சம்பவம் உண்மையில் 1993 ஆம் ஆண்டு நடந்தவை. இந்த படத்தின் தாக்கத்தால் உண்மையில் பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு அரசின் சார்பில் உதவிகள் வழங்கப்படுகின்றன.

40 ஆவது படம்
இந்த நிலையில் சூர்யா நடிக்கும் 40ஆவது படமான எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தை நடிகர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்குகிறார். தம்பிக்கு எப்படி நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தாரோ அதே போல் தனது எதற்கும் துணிந்தவன் படத்தின் மூலம் அண்ணன் சூர்யாவுக்கு நற்பெயரை ஏற்படுத்தி தருவார் என சொல்லப்படுகிறது.

ஜனவரி 2022
இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் டீசரும் வெளியானது. அதில் சூர்யா பின்னி மில்லில் கோபத்துடன் அரிவாளுடன் இருப்பது போன்றும் யாரையோ பயங்கரமாக தாக்கிவிட்டோ கொன்றுவிட்டோ அவரை இழுத்து செல்வது போலும் உள்ளது.

நிலைநாட்ட பாடுபடுவார்
அது போல் நிறைய இளைஞர்களை அவர் பின்னி மில்லில் அடைத்து வைத்து தாக்குவது போலும் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் உண்மைச் சம்பவமான பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கொண்டு வருகிறாரோ என சந்தேகிக்கப்படுகிறது. தகவலறிந்த வட்டாரங்களும் ஜெய்பீம் போல் உண்மைக் கதைகளுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து பொள்ளாச்சி சம்பவத்தை கையில் எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஆட்சியில் நீதியை நிலைநாட்ட பாடுபடுவார் என சொல்லப்படுகிறது.

மிரட்டல்
பொள்ளாச்சியில் காதல் வலை விரித்து பெண்களை தனிமையான இடத்திற்கு அழைத்து சென்று அங்கு நண்பர்களுடன் மிரட்டியும் தாக்கியும் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த விவகாரத்தில் பெரும் புள்ளிகளின் வாரிசுகளுக்கு தொடர்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு உண்மைக் கதை திரைப்படமாகிறது என்றாலே அதில் வெளியே வராத மறைக்கப்பட்ட உண்மைகள் எல்லாம் வெளியே வரும். அதனால் இந்த படம் வெளி வந்தால் யார் யாருக்கெல்லாம் பாதிப்பு இருக்குமோ அவர்களின் வயிற்றில் இப்போதே புளி கரைக்க தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.
Recommended Video

சூர்யா சமாளிப்பு
யாரை யாராக சித்தரித்து எந்த மாதிரி டேமேஜ் ஆகுமோ என்ற அச்சத்தில் முக்கிய புள்ளிகள் இருப்பதாக தெரிகிறது. எதற்கும் துணிந்தவன் பெயருக்கு ஏற்ப என்ன செய்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு வேளை பொள்ளாச்சி சம்பவமாக இருந்தால் அதனால் ஏற்படும் எதிர்ப்புகளை சமாளிக்க எதற்கும் துணிந்தவர் (ன்) இந்த சூர்யா என்கிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications