சூர்யாவை மீண்டும் சீண்டும் பாமக.. விடாமல் விரட்டும் வன்னியர் சங்கம்.. நடிகருக்கு தமுஎச ஆதரவு குரல்
நடிகர் சூர்யாவுக்கு தமுஎச தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளது
சென்னை: தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்கும் முயற்சியில் பாமக, வன்னியர் சங்கம் ஈடுபட்டு வருகின்றன.. இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, எந்தவித மிரட்டலுக்கும் பணியாமல் நடிகர் சூர்யாவின் படத்தை வெளியிடுவதற்கு உகந்த சூழலை உருவாக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்று தமுஎச கோரிக்கை விடுத்துள்ளது.
ஜெய்பீம் படம் வெளியானதில் இருந்தே பாமக, வன்னியர் சங்கம் போன்றவை நடிகர் சூர்யா மீது கடுமையான அதிருப்தியிலும் கோபத்திலும் உள்ளன.
சூர்யா நடித்த படங்களை திரையிடக்கூடாது என்பது முதல் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது வரை பல்வேறு வகைகளில் சூர்யாவுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன...

முற்றுப்புள்ளி
பிறகு அந்த படத்தின் டைரக்டர் வருத்தம் தெரிவித்ததை அடுத்து அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டன. இப்போது சூர்யாவின் அடுத்த படம் எதற்கும் துணிந்தவன், மார்ச் 10-ம் தேதி தியேட்டர்களில் வெளியாக போகிறது.. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்களிடம் மாவட்ட பாமகவினர் மனு ஒன்று அளித்து வருகின்றனர்.

பாமக
அந்த மனுவில்,ஜெய்பீம் படத்தில் வன்னியர்களின் அடையாளமான அக்னி கலசத்தை அவர் வீட்டில் காட்சிப்படுத்தியுள்ளனர். ஒட்டு மொத்த வன்னிய சமுதாய மக்கள் சாதிவெறி வன்மம் உள்ளவர்கள் போல அப்படத்தில் காட்டியுள்ளனர். சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் சாதி வன்மத்தைத் தூண்டும் விதமாக இத்திரைப்படம் எடுத்திருப்பது வன்னியர்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது.

மன்னிப்பு
வன்னியர்களை வன்முறையாளர்களாகவும் தொடர்ந்து சித்தரித்து வரும் நடிகர் சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தை சூர்யா வன்னியர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்கும் வரை கடலூர் மாவட்டத்தில் ஒளிபரப்ப அனுமதிக்கக்கூடாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குதான் தமுஎச எனப்படும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கண்டனம் தெரிவித்துள்ளது.. பாமக, வன்னியர் சங்கத்துக்கு கண்டனம் தெரிவித்தும், சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தும் ஒரு அறிக்கையை தமுஎச மாநிலத்தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சூர்யா
அதில், "திரைக்கலைஞர் சூர்யா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள "எதற்கும் துணிந்தவன்" திரைப்படம் 10.03.2022ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் நிலையில், இப்படத்தை திரையிடக்கூடாதென பாட்டாளி மக்கள் கட்சியினரும் வன்னியர் சங்கத்தினரும் திரையரங்க உரிமையாளர்களை கடிதம் மூலம் மிரட்டிவருவதற்கு தமுஎகச கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

மிரட்டல்
2021 நவம்பரில் வெளியான ஜெய்பீம் படம், வன்னியர்களை அவமதித்துவிட்டதாகவும் அதற்காக அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் கதாநாயகருமான சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை அவர் தொடர்புடைய எந்தவொரு படத்தையும் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்றும் அப்போது பாமகவினர் மிரட்டல் விடுத்திருந்தனர். அந்த மிரட்டலின் தொடர்ச்சியில்தான் இப்போது எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிடக்கூடாதென அக்கட்சியினரும் வன்னிய சங்கத்தினரும் மிரட்டிக் கொண்டுள்ளனர்.

அச்சுறுத்தல்
தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கும் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு இவர்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் களைவதற்கும், மிரட்டலுக்குப் பணியாமல் படத்தை வெளியிடுவதற்கு உகந்தச் சூழலை உருவாக்குவதற்கும் தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் பெயரால் விடுக்கப்பட்டுள்ள இம்மிரட்டலுக்கு எதிராக குரலெழுப்புமாறு கருத்துரிமையில் நம்பிக்கையுள்ள யாவரையும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications