100 பேருக்கு 500 போலீஸ்! என் டிராமாவை விட பெரிய காமெடி! பாஜக பொருளாதார பிரிவை கலாய்த்த எஸ்.வி.சேகர்!
சென்னை: தன்னை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக பாஜக பொருளாதார பிரிவு மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா அறிவித்திருப்பது தனது டிராமாவை விட பெரிய காமெடி என கலாய்த்துள்ளார் நடிகர் எஸ்.வி.சேகர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டிகள் கொடுத்து வரும் நிலையில், அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் பாஜக பொருளாதார பிரிவு மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா, எஸ்.வி.சேகரை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தார்.

அண்ணாமலை குறித்து எஸ்.வி.சேகர் தேவையற்ற கருத்துக்களை கூறி வருவதாகவும் இதனை பாஜக ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது எனவும் எம்.எஸ்.ஷா கூறியிருந்தார். அதேபோல் தமிழகம் முழுவதும் திராவிட இயக்கங்களுக்கு இணையாக பாஜக காலூன்றி இருப்பதற்கு காரணமே அண்ணாமலை தான் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
இப்படி பல்வேறு தகுதிகளை கொண்ட அண்ணாமலை குறித்து எஸ்.வி.சேகர் முன் வைக்கும் கருத்துக்கள் ஏற்க இயலாத வகையில் இருப்பதாகவும் இதனால் எஸ்.வி.சேகரின் பேச்சை கண்டித்து உருவ பொம்மை எரிப்பு போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என பாஜக பொருளாதார பிரிவு மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா தெரிவித்திருந்தார்.
இவருக்கே தனக்கே உரிய பாணியில் கவுன்டர் கொடுத்து கலாய்த்திருக்கிறார் நடிகர் எஸ்.வி. சேகர். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவு வருமாறு; ''ஐயையோ 500 போலீஸ் பாதுகாப்புடன் 100 பேர் போராட்டம். எந்த அதிகாரமும் இல்லாத பொருளாதாரம் உயர்த்தும் பிரிவு. அணியிலெயே பிரிவு. விளங்கிடும். என் டிராமாவைவிட அதிக காமெடி ரசியுங்கள்.'' இவ்வாறு எஸ்.வி.சேகர் பதிவிட்டுள்ளார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications