விஜய்யை ஆட்சியமைக்க அழையுங்கள்.. பாதம் தொட்டு கேட்கிறேன்! கும்பிட்டு கலங்கிய நடிகர் தம்பி ராமையா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ''கேரளா ஆளுநர் மற்றும் தமிழ்நாட்டு பொறுப்பு ஆளுநர் அய்யா அர்லேகர் அவரது பாதம் தொட்டு வணங்குகிறேன். விஜய்க்காக வீடுகளில் மாணவ-மாணவிகள், பேரன் பேத்திகளின் கூக்குரல் போடுகின்றனர். அடுத்த எம்ஜிஆர் ஆகிவிட்ட தம்பி விஜய்யை ஆட்சியமைக்க வழிவிட வேண்டும். பாண்டிச்சேரியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்களாவே வந்து விஜய்க்கு ஆதரவு கொடுங்க. அடுத்த எம்ஜிஆர் சார். விஜய்யை ஆட்சி கட்டிலில் அமர வையுங்கள். அறுதி பெரும்பான்மை நிரூபித்தால் ஆட்சி தொடரட்டும். நிரூபிக்காவிட்டால் ஆட்சி கலையட்டும். அர்லேகர் அய்யா தம்பி விஜய்யை அழையுங்கள். இந்த குழந்தைகளையும், சிறார்களை காப்பாற்றுங்கள்'' என்று கைகளை கூப்பி நடிகர் தம்பி ராமையா வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் கூட மெஜாரிட்டியை பெறவில்லை. தமிழகத்தில் ஆட்சியமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

Thambi Ramaiah

இந்நிலையில் தான் ஆட்சியமைத்துவிட்டு மெஜாரிட்டியை நிரூபிக்க விஜய் முடிவு செய்தார். இதற்காக அவர் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் ஆட்சியமைக்க 2 முறை உரிமை கோரினார். ஆனால் அவர் இன்னும் விஜய்க்கு அனுமதி கொடுக்கவில்லை.

தம்பி ராமையா வீடியோ

இந்நிலையில் தான் நடிகர் தம்பி ராமையா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது: ''வணக்கம். திரை கலைஞன். பொதுமக்களிடம் ஒருவன் தம்பி ராமையா. கேரளா ஆளுநர் மற்றும் தமிழ்நாட்டு பொறுப்பு ஆளுநர் அய்யா அர்லேகர் அவரது பாதம் தொட்டு வணங்குகிறேன். நீங்கள் மிகப்பெரிய அறிவாற்றல், ஆளுமை கொண்டவர் என்பதால் தான் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பேரன் - பேத்திகள் கூக்குரல்

நான் எந்த கட்சியையும் சாராதவன். புரட்சி தலைவர் எம்ஜிஆர் மீது மட்டும் பக்தி கொண்டவன். இப்போது நடந்து முடிந்த தேர்தலில் 40 சதவீத ஓட்டை இளைய தளபதி விஜய் வாங்கி உள்ளார். 2 கோடி பேர் ஓட்டு போட்டுள்ளனர். இதில் ஓட்டுரிமையற்ற மாணவர்கள், மாணவிகள், எனது பேத்தி, பேரன் என்று எல்லா குடும்பத்திலும் இருப்பவர்களின் ஆசையும், அபிலாசையும் ஒழிந்துள்ளது.

கடந்த 2, 3 நாள் நிகழ்வு என்பது தமிழ்நாட்டில் உள்ள ஓட்டுரிமையற்ற குழந்தைகள், மாணவ -மாணவிகள் மற்றும் என்னை போன்றவர்களின் பேரன், பேத்திகளை மனம் கலங்க செய்துள்ளது. எல்லோருடைய வீட்டிலும் கூக்குரல். தமிழ்நாட்டில் எல்லோரது வீட்டிலும் குழந்தைகளின் கூக்குரல். எப்போது வருவாங்க.. எத்தனை சீட். எப்போது பதவியேற்பாங்க.. பதவி ஏற்றுவிட்டார்களா.. என்று ஒரு இனம் புரியாத தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு எல்லோரும் மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்து கிடக்கிறார்கள்.

விஜய்யை ஆட்சி கட்டிலில் அமர வையுங்கள்

விஜய் 113யை காட்டிவிட்டார்கள். 5யை கூட தூக்கிப்போடுங்க. 108 இருக்குல்ல அய்யா. விஜய்யை அழைங்க. அவர் கேட்கும் 2 வார அவகாசத்தை கொடுங்க.. அவரால் ப்ரூப் பண்ண முடிந்தால் ஆட்சி தொடரட்டும். இல்லாவிட்டால் சட்டமே அவரை ஆட்சியில் இருந்து தூக்கவிடப்போகிறது. அதன்பிறகு இன்னொரு சட்டசபையை கூட தேர்வு பண்ணுங்க. அதற்கு பிறகு யாரும் வரட்டும்.

தயவு செய்து அறியாமை, ஓட்டுரிமையில்லாத குழந்தைகளின் பார்வையில் இருந்து நான் கேட்டு கொள்கிறேன். அர்லேகர் அய்யா, அடுத்த எம்ஜிஆர் ஆகிவிட்ட தம்பி விஜய்யை ஆட்சியமைக்க வழிவிட வேண்டும். பாண்டிச்சேரியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்களாவே வந்து விஜய்க்கு ஆதரவு கொடுங்க. அடுத்த எம்ஜிஆர் சார். விஜய்யை ஆட்சி கட்டிலில் அமர வையுங்கள். அறுதி பெரும்பான்மை நிரூபித்தால் ஆட்சி தொடரட்டும். நிரூபிக்காவிட்டால் ஆட்சி கலையட்டும். அர்லேகர் அய்யா தம்பி விஜய்யை அழையுங்கள். இந்த குழந்தைகளையும், சிறார்களை காப்பாற்றுங்கள் அய்யா'' என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+