மக்கள் வெள்ளத்தில் கலியுக கர்ணன்! 2 மணி நேரத்தில் 5 கி.மீ தூரமே கடந்த விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொண்டர்கள், ரசிகர்களின் வெள்ளத்துக்கு மத்தியில் நடிகர் விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலில் இருந்து தேமுதிக அலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வரும் நிலையில் இறுதி ஊர்வலம் தொடங்கிய முதல் 30 நிமிடத்தில் வெறும் 500 மீட்டரும், 2 மணிநேரத்தில் வெறும் 5 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே நகர்ந்ததோடு மக்கள் கூட்டத்தால் சென்னையே ஸ்தம்பித்து போனது.

நடிகராக இருந்து அரசியலில் நுழைந்தவர் விஜயகாந்த். எம்எல்ஏ, எதிர்க்கட்சி தலைவர் வரை உயர்ந்த அவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

Actor turned politician Vijayakanths funeral procession moved only 500 metre in the first 30 minutes

இந்நிலையில் தான் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த விஜயகாந்த் நேற்று காலமானார். இதையடுத்து நேற்று முதல் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர்.

நேற்று விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திலும், இன்று காலை முதல் தீவுத்திடலில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது. ஏராளமான மக்கள் நீண்டவரிசையில் காத்து நின்று விஜயகாந்துக்கு பிரியா விடை கொடுத்தனர். இதையடுத்து சுமார் 3 மணிக்கு விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விஜயகாந்தின் உடல் ஏற்றப்பட்டது. அதனை பார்த்து அங்கு திரண்டு இருந்தவர்கள் கதறி அழுதனர்.

அந்த வாகனத்தில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, 2 மகன்கள் மற்றும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருந்த நிலையில் வாகனத்தின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று ஊர்வலமாக சென்றனர். மேலும் சாலையின் இருபுறமும் மக்கள் நின்றபடி விஜயகாந்தின் உடலை சுமந்து செல்லும் வாகனம் மீது மலர்தூவினர். மக்கள் அதிகளவில் கூடியதால் சென்னை தீவுத்திடலில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கோயம்பேடு செல்லும் பாதை முற்றிலுமாக ஸ்தம்பித்தது.

‛‛சொக்கத்தங்கம்யா அவரு’’.. விஜயகாந்தின் பாதத்தை வணங்கிய ஆளுநர் ஆர்என் ரவி.. நேரில் அஞ்சலி
அதிகப்படியான மக்கள் கூட்டத்தால் விஜயகாந்தின் உடலை சுமந்து செல்லும் வாகனம் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றது. இறுதி ஊர்வலம் தொடங்கிய முதல் 30 நிமிடத்தில் வெறும் 500 மீட்டர் மட்டுமே அந்த வாகனம் கடந்தது. இந்த ஊர்வலம் தொடங்கி 2 மணிநேரம் ஆன நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி வெறும் 5 கிலோமீட்டர் தொலைவை மட்டுமே கடந்து இருந்தது. அதோடு ஊர்வலம் செல்லும் ரோட்டின் இருபுறமும் உள்ள கட்டத்தின் மேல் நின்று ஏராளமான மக்கள் விஜயகாந்தை வழியனுப்பி வைத்தனர்.

விஜயகாந்தின் உடல் மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது உடல் இறுதி சடங்குகளுடன் நல்லடக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் திரண்டுள்ள நிலையில் இறுதி ஊர்வலம் மெதுவாக தான் நகர்ந்து வருகிறது. இதனால் உடல் அடக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+