நடிகர் செந்திலுக்காக வேட்டியை மடித்து கட்டி.. தனியாளாக நின்ற விஜயகாந்த்.. வாகை சந்திரசேகர் பெருமிதம்
சென்னை: நடிகர் விஜயகாந்த் எத்தனை பெரிய கூட்டமாக இருந்தாலும் தனியொரு ஆளாக இருந்து சமாளிப்பதில் வல்லவர் என நடிகர் வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ வாகை சந்திரசேகர் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவருக்கு ஒரு விழா எடுப்பதாக மேடையில் அறிவித்தேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி நடந்து கொண்டிருந்த போது அதுகுறித்து அவரிடம் பேசிய போது, இந்த விழாவுக்கு யார் வரபோகிறார்கள் என்றே அவர் வெளிப்படையாக கேட்டார்.

அதற்கு நான் நாங்கள் இருக்கிறோம், விழாவை சிறப்பாக நடத்துகிறோம் என்றேன். பின்னர் இதுகுறித்து விஜயகாந்திடம் கூறினேன், அவர் உடனே சிறந்த தலைவர் அவருக்கு நிச்சயம் விழா எடுக்க வேண்டும் என்றார். இந்த விழாவை ஆரம்பித்து வைத்தது நானாக இருந்தாலும் சிறப்பாக நடத்தி கொடுத்தது விஜயகாந்த்தான்.
அந்த அளவுக்கு அவருக்கு கருணாநிதி மீது பற்று இருக்கிறது. யாராக இருந்தாலும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக பேசுவார் விஜயகாந்த். அதனால்தான் அவர் மீது கட்சி சாராமல் அனைவரும் அன்பை பொழிகிறார்கள். ஒரு ஷூட்டிங் என்றால் விஜயகாந்த் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்குவார்.
அங்கு ரசிகர்களை கட்டுப்படுத்துவார். அவர் சொன்னால் ரசிகர்கள் கேட்பார்கள். அந்தளவுக்கு மக்களுக்கும் விஜிக்கும் இடையே ஒரு ஈர்ப்பு இருக்கிறது. மற்ற நடிகர்கள் ரசிகர்களிடம் கோபித்துக் கொண்டால், என்ன இது நாம் இவரை பார்க்க வந்திருக்கிறோம் , இவர் இப்படி கோபித்து கொள்கிறாரே என கேட்பார்கள்.
ஆனால் விஜயகாந்துக்கு மட்டும்தான் அந்த சக்தி இருக்கிறது. எப்படி கூட்டம் இருந்தாலும் ஒற்றை ஆளாக விஜயகாந்த் கட்டுப்படுத்திவிடுவார். செந்தூர பூவே ஷூட்டிங்கின் போது இரவில் ஏதோ ஷூட்டிங் எடுத்ததற்காக நடிகர் செந்திலுக்கும் ஊர் மக்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது போலீஸார் எல்லாம் வந்தார்கள்.
ஆனால் விஜயகாந்த் ஒற்றையாக நின்று அந்த மக்களை கட்டுப்படுத்தினார். விஜயகாந்துக்கு கள்ளம் கபடம் தெரியாது, நேர்மையான மனிதர். ஒரு ஷூட்டிங்கின் போது ஹீரோவாக நடித்த விஜயகாந்த் சாப்பிட உட்கார்ந்த போது ஹீரோயின் சாப்பிட்ட பிறகுதான் ஹீரோ சாப்பிட வேண்டும் என தெரிவித்ததை அடுத்து அன்று முதல் தனது திநகர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் உணவு வழங்கி வந்தார்.
அப்படிப்பட்ட விஜயகாந்துக்கு என்ன ஆனது என தெரியவில்லை. ஆனால் அவர் எப்படியாவது மீண்டு வந்து அதே கம்பீர பேச்சுடன், நல்ல பண்புடன் வர வேண்டும். கடவுள் நிச்சயம் எனது வேண்டுதலை நிறைவேற்றுவார் என நம்புகிறேன். நான், ராதாரவி, விஜயகாந்த் மூவரும் நண்பர்கள் என்பதால் படப்பிடிப்பு தளங்களில் ஒரே அரட்டையாக இருக்கும்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பே திமுகவில் இருக்கிறேன். ஆனால் விஜயகாந்துக்கு அடிப்படையிலேயே மக்களுக்கு உதவும் குணம் இருக்கிறது. சினிமாவில் நடித்த பிறகு அரசியலுக்கு வந்தார். எனது கட்சி கொள்கைகள் ஒன்றாக இருந்தாலும் அவரை என் நண்பர் என்ற முறையில் வாழ்த்திக் கொண்டுதான் இருந்தேன். தற்போது அவரது உடல்நலம் நன்றாக இருந்திருந்தால் அவர் நிச்சயமாக அரசியலில் பெரிய தலைவராக இருந்திருப்பார். இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை.
அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அரசியலில் சாதிப்பார். விஜயகாந்தை போய் பார்த்தவர்கள் சொன்னது வரை விஜயகாந்த் அவர்களுடைய கைகளை பற்றிக் கொண்டு புன்சிரிப்பு சிரிப்பாராம். எனவே ஊற்றுக் கண் உயிரோடு இருக்கிறது. இது வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என வாகை சந்திரசேகர் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications