நாகேஷுடன் ஒப்பிட்டு கேள்வி கேட்ட டாக்டர்.. பதில் கேள்வி கேட்டு கப்சிப்பாக்கிய வெண்ணிற ஆடை மூர்த்தி
நாகேஷுடன் ஒப்பிட்டு கேள்வி கேட்ட டாக்டரை கப்சிப்பாக்கிய வெண்ணிற ஆடை மூர்த்தி
சென்னை: நாகேஷ் அளவுக்கு நீங்கள் ஏன் உயரவில்லை என கேள்வி கேட்ட டாக்டரை அவர் ரூட்டிலேயே போய் மடக்கிய நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.
தமிழ்த் திரையுலகில் யார் பாணியையும் பின்பற்றாமல் தனி ஒரு ஸ்டைலால் மக்களை சிரிக்க வைத்தவர் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. சிதம்பரத்தை சேர்ந்த இவர் ஒரு வழக்கறிஞர். அருமையாக ஜோதிடம் பார்ப்பார்.
திரைப்படங்களுக்கு கதைகளையும் எழுதியுள்ளார். இவர் 1965 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிற ஆடை என்ற படத்தில் நடித்ததால் இவரது பெயருக்கு முன்னால் அந்த படத்தின் பெயர் சேர்க்கப்பட்டு வெண்ணிற ஆடை மூர்த்தி என ஆனது.

90 படங்கள்
இவர் இதுவரை 90-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது முகபாவனையே சிரிப்பை வரவழைக்கும். மருதமலை படத்தில் இவர் மருதமலை மாமணியே பாடும் போது வடிவேல் செய்யும் காமெடி, அதற்கு மூர்த்தி கொடுக்கும் ரியாக்ஷன் எல்லாமே அருமையாக இருக்கும். எத்தனையே காமெடியன்கள் இருந்தாலும் தனது தனித்துவமான நடிப்பில் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

காமெடியன்கள்
சுருளிராஜன், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், எஸ் எஸ் சந்திரன் உள்ளிட்ட காமெடியன்கள் இருந்த காலத்தில் தனக்கென வழியை அமைத்துக் கொண்டு காமெடி செய்ததில் இவருக்கு நிகர் இவரே. தனது படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை மணிமாலாவை இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். 1970 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது. முதலில் ஹலோ ஹாய் சொன்ன இவர்களுக்கு காதல் ஏற்பட்ட நிலையில் அது 5 ஆண்டுகள் கழித்து திருமணத்தில் முடிந்தது.

மணிமாலா
திருமணத்தின் போது மணிமாலா பீக்கில் இருந்தார். ஆனால் திருமணமானதும் அவர் நடிப்பை விட்டுவிட்டார். எனினும் டைரக்டர் கே பாலசந்தர் சிந்து பைரவி படத்தில் நடிக்க மணிமாலாவை அழைத்தார். வெண்ணிற ஆடை மூர்த்தியின் காமெடி இரட்டை அர்த்தத்தில் இருப்பதாக சொல்லப்படுவதுண்டு. இதுகுறித்து அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதில் தமிழ் செழிப்பான மொழி. ஒரு வார்த்தைக்கு 7 அல்லது 8 அர்த்தம் வரும். ஏற்றி, இறக்கி சொல்லும் போது ஒரு அர்த்தமும் நிதானமாக சொல்லும் போது இன்னொரு அர்த்தமும் வரும் என விளக்கியிருந்தார்.

வயது முதிர்வு
தற்போது வயது முதிர்வால் படங்களில் நடிக்காமல் உள்ள மூர்த்தியிடம் சாய் வித் சித்ரா நிகழ்ச்சி சார்பில் இயக்குநரும் நடிகருமான லட்சுமணன் பேட்டி எடுத்தார். அப்போது அவர் பல அனுபவங்களை பகிர்ந்தார். அதில் அவர் கூறியதாவது: ஒரு முறை விமான பயணத்தின் போது மருத்துவர் ஒருவர் என்னுடன் பயணம் செய்தார். அவர் என்னிடம், நீங்கள் ஏன் நாகேஷ் லெவலுக்கு முன்னேறவில்லை என கேட்டார்.

உழைப்பில் குறை வைக்கக் கூடாது
அதற்கு நான், அவரவருக்கு விதிக்கப்பட்ட படி வாழ்க்கை அமையும். யாருக்கு எப்போது எப்படி திருப்பு முனை அமையும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு பெரிய உயரம் நோக்கி உழைத்துக்கொண்டே இருப்பது மட்டும்தான் நம் கடமை. நம் உழைப்பில் குறை வைக்காமல் உழைத்துவிட வேண்டும். பலன் எப்படி இருந்தாலும் ஏற்க வேண்டும் என்றேன்.

கீதா உபதேசம்
இதை சொல்லிவிட்டு அதே மருத்துவரிடம் நான் கேட்டேன், நம்ம ஜென்ரல் ஹாஸ்பிட்டலில் டாக்டர் ரங்காசாரிக்கு சிலை வெச்சிருக்காங்களே.. நீங்க ஏன் டாக்டர் அவர் அளவுக்கு சாதிக்கவில்லை என கேட்டேன். அதற்கு அந்த டாக்டர் கப்சிப் என அமைதியாகிவிட்டார். மூர்த்தி என்ன சொல்ல வருகிறார் என்றால் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே. எந்த துறையாக இருந்தாலும் யாரையும் யாருடனும் ஒப்பிட்டு பேசக் கூடாது. அவரவர் திறமைக்கேற்ப அவரவருக்கு கிடைக்கும் மரியாதையும் புகழும் கிடைக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications