ஆஹா.. இவருமா? விஜய் கழுத்தை கவனிச்சீங்களா? லோகேஷ் கனகராஜ் ஐடியா கொடுத்திருப்பாரோ? தனுஷ், எஸ்கே வேற!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேற்று மாணவர்களை சந்தித்து கல்வி விருதுகளை வழங்கினார். இந்த நிலையில் விஜயின் கழுத்தில் ஸ்படிக மாலை ஒன்றும், கருங்காலி மாலை ஒன்றும் இருந்தது. இதுவரை பொது இடங்களில் விஜய் இது போன்று அணிந்து யாருமே பார்த்ததில்லை. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் கருங்காலி மாலைகளுடன் பொதுவெளியில் தோன்றிய நிலையில் முதன்முறையாக விஜய்யும் கருங்காலி மாலையோடு ஸ்படிக மாலையும் அணிந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது அரசியலுக்கு வந்திருக்கிறார் நடிகர் விஜய். கடைசியாக ஜனநாயகன் திரைப்படம் அவர் நடிப்பில் வெளியாகவிருக்கிறது. படத்தின் சூட்டிங் நிறைவடைந்திருக்கும் நிலையில் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக விஜய் அறிவித்தார்.
நேற்று ஒரே நாளில் மாணவர்கள் சந்திப்பு, பரந்தூர் போராட்ட குழுவினரை சந்தித்தது, ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை சந்தித்தது என பரபரப்பாக இருக்கிறார் விஜய். நேற்று மூன்றாம் கட்டமாக மாமல்லபுரத்தில் விஜய் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து பனையூர் கட்சி அலுவலகத்திற்கு சென்ற விஜய், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை சந்தித்து அவர்களது போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்பதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் சிலரை சந்தித்து பேசினார். திமுக பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் விஜய் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் விஜயின் தோற்றத்தை கவனித்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை சொல்லி வருகின்றனர். முறுக்கு மீசையுடன் மெர்சல் படத்தில் வரும் அப்பா விஜய் போல இருக்கிறார் என கூறி வருகின்றனர். குறிப்பாக விஜயின் கழுத்தில் இருந்த விஷயம் தான் இதுவரை இல்லாத ஒன்று. விஜய் ஸ்படிக மாலை ஒன்றையும், கருங்காலி மாலை ஒன்றையும் அணிந்திருந்தார். இதுவரை பொதுவெளியில் விஜய் இது போன்று கழுத்தில் மாலையுடன் தோன்றியது இல்லை என்கின்றனர் அவரது ரசிகர்கள்.
கருங்காலி மாலை என்பது கடந்த சில வருடங்களாகவே ஃபேமஸ் ஆகி வருகிறது. குறிப்பாக நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கருங்காலி மாலை அணிந்து பொதுவெளியில் தோன்றினர். இதை அடுத்து அவர்களது ரசிகர்களும் கருங்காலி மாலைகளை வாங்கி அணிந்து வருகின்றனர். கருங்காலி மாலை அணிந்தால் தீய சக்திகள் விலகிப் போகும் என்பது நம்பிக்கை. அதே நேரத்தில் ஸ்படிக மாலை அணிவதால் உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
இப்படியாக சிவகார்த்திகேயன், தனுஷ், லோகேஷ் கனகராஜை தொடர்ந்து விஜயும் கழுத்தில் ஸ்படிக மாலை கருங்காலி மாலை அணிந்து இருக்கிறார். அதே நேரத்தில் உண்மையிலேயே அவர் அந்த காரணத்திற்காக மாலை அணிந்து இருக்கிறாரா அல்லது வேறு ஏதுவும் காரணமா என தெரியவில்லை, இருந்தபோதும் விஜயின் இந்த க்யூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
அது மட்டும் இல்லாமல் பொட்டு வைத்து அழகாக விஜய் இருக்கிறார் எனவும் கூறி வருகின்றனர். கடந்த முறை மாணவர்கள் சந்திப்பின்போது விஜய் பொட்டு வைத்து இருந்தார். அதற்கு பிறகு விஜயின் நெற்றியில் இருந்து பொட்டு மாயமாகி விட்டது. இந்த நிலையில் தற்போது நெற்றியில் பொட்டு, கழுத்தில் மாலையோடு வந்திருக்கும் விஜய் நாளை எந்த கெட்டப்பில் மாணவர்களை சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.
-
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
முடிவை மாற்றிய ராகவா லாரன்ஸ்.. விஜய்யா? அண்ணாமலையா? யாருடன் கைகோர்க்கிறார்? நாளை மறுநாள் அறிவிப்பு -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications