ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தவெக விஜய்! துவா செய்யும் போது செய்த செயல்! இதனை கவனிச்சீங்களா?
சென்னை: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முன்னதாக விஜயை சந்திக்க ஏராளமான இஸ்லாமியர்களும் ரசிகர்களும் திரண்டதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அதில் விஜய் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ரமலான் மாதத்தை முன்னிட்டு அக்கட்சி சார்பில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 15க்கும் மேற்பட்ட ஜமாத் நிர்வாகிகள், தமிழக அரசின் தலைமை காட்சி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது.
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்காக 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி, உலர் பழங்கள் ஆகியவை தயார் செய்யப்பட்டு தயாராக இருந்தது தொடர்ந்து. ஒய்சிஎம்சிஏ மைதானத்தில் ஏராளமான நிர்வாகிகளும் இஸ்லாமியர்களும் குவிய ஆரம்பித்தனர். நேரம் செல்ல செல்ல அதிக அளவில் ரசிகர்களும் குவிந்தனர். சரியாக 5.20 மணிக்கு விஜய் அங்கு வந்தார்.

ரமலான் மாதத்தை முன்னிட்டு இன்று ஒரு நாள் விஜய் நோன்பிருந்த நிலையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அவருடன், ஜமாத் நிர்வாகிகள், கட்சியினர், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பலர் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தலையில் தொப்பி, வெள்ளை கைலி, வெள்ளை சட்டையுடன் வந்த விஜயை அங்கிருந்தவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
தொடர்ந்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு முன்னதாக துவா செய்யப்பட்டது. விஜயின் அரசியல் பயணம் வெற்றிகரமாக இருக்க வேண்டும் என துவா செய்ததோடு விஜய் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசு வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. அவருடன் இஸ்லாமியர்களும் அந்த துவாவில் கலந்து கொண்டனர். அப்போது விஜய் கைகளை கூப்பி பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து நோன்பு திறக்கும் விதமாக ஜூஸ், பேரிச்சை ,நோன்பு கஞ்சி ஆகியவற்றை விஜய் எடுத்துக் கொண்டார். அவருடன் இஸ்லாமியர்களும் சாப்பிட்டு நோன்பு துறந்தனர்.

இந்த நிலையில் விஜய் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒய்எம்சிஏ மைதானத்திற்குள் மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகள் உள்ளிட்ட 2000 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மேலும் திருவல்லிக்கேணி, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அழைப்பிதழ் அடிப்படையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கு இடையே தடுப்புகளை தாண்டி விஜய் ரசிகர்களும் நிர்வாகிகளும் உள்ளே வந்ததால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் விஜய் நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்குள் வந்தபோது அனைவரும் அவருடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுக்க முயற்சித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த நிர்வாகிகளும் போலீசாரும் ஒரு வழியாக அவர்களை அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து விஜய் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
-
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங்












Click it and Unblock the Notifications