ஸ்கூல் பக்கத்துலகூடதான் டாஸ்மாக் இருக்கு! பசங்க டெய்லி 2 ரவுண்ட் அடிச்சிட்டா போறாங்க? விஜய் கேள்வி
சென்னை: பள்ளி, கல்லூரி அருகே டாஸ்மாக் கடை இருக்கு. அங்க போய் பசங்க ரெண்டு ரவுண்ட் அடிச்சிட்டா போறாங்க என நான் ரெடி பாடல் சர்ச்சைக்கு நடிகர் விஜய் பதிலடி கொடுத்துள்ளார்.
லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதிலிருந்தே சில சர்ச்சைகள் எழுந்தன. விஜய் பிறந்த நாளன்று அவர் பாடிய நா ரெடி பாடல் வெளியானது. அனிருத் இசையில் அவர் பாடிய இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.

சிறு குழந்தைகள் கூட இந்த பாடலை முணுமுணுக்கும் அளவுக்கு இந்த பாடல் இருந்தது. இந்த பாடலுக்கு சிலர் எதிர்ப்புகளையும் தெரிவித்தனர். அந்த வகையில் அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா, விஜய் பாடிய நா ரெடி பாடலுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்திருந்தார்.
அவர் கூறுகையில் லியோ படத்தின் பாடல் வரிகள் முழுவதும் மதுவை பற்றியும், புகைப்பிடிக்கிறது பற்றியும் புகைப்பிடித்தால் உங்களுக்கு பவர் கிடைக்குதுனு சொல்றாங்க, மில்லி உள்ள போன கில்லி வெளிய வரும் இந்த மாதிரியான வார்த்தைகள் வரிகள் எல்லாம் பயன்படுத்தலாமா? அவருக்கு ரசிகர்கள் 5 வயதில் இருந்து இருக்கிறார்கள்.

அப்படியிருக்கும் போது அவருக்கு கொஞ்சமாவது சமூகத்தின் மீது அக்கறை இருக்க வேண்டாமா? விரலுக்கு இடையில் தீப்பந்தமாம்.. இதெல்லாம் ஒரு வரியா, இதை எழுதுன அசல் கோளாறு, முழு கோளாறான ஆளு. இது மாதிரியான கீழ்த்தரமான வரிகளை பாட விஜய்க்கு எப்படி மனசு வந்துச்சு! ஏற்கெனவே சொல்லியிருந்தாரு இனிமே சிகரெட் வாய்ல வச்சிட்டு நடிக்க மாட்டேன்னு சொன்னார்.
ஆனா சர்க்கார் படத்துல முதல் காட்சியே சீக்ரெட் வச்சிட்டு இருந்தாரு. அதற்கும் நான் எதிர்ப்பு கொடுத்தேன். இந்த பாடல் மூலமா ஒரே ஒரு இளைஞனோ, ஒரு பள்ளி மாணவனோ வீணா போனா அதற்கு யார் பொறுப்பேற்பது, விஜய் பொறுப்பேற்பாரா? மாணவர்களுக்கு விருது கொடுத்து, அவர்களை நேர்ல சந்தித்தீர்களே, அந்த அரங்கத்தில் இந்த பாடலை உங்களால பதிவிட முடியுமா, ஏதாவது ஒரு வரி இருந்தா பரவாயில்லா, பாடல் முழுக்கவே அப்படித்தான் இருக்கிறது.
எனக்கு பாட்டில்ல பத்தாது அண்டாவுல கொண்டுவந்து குடுனு சொன்னா, இதை எதிர்க்காம எப்படி இருக்க முடியும். இதை சினிமாவாக பார்க்க முடியாது. இதனால் ஒருத்தர் சீரழிந்தாலும் அதற்கு விஜய்தான் காரணம் என ராஜேஸ்வரி பிரியா கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் அவரை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ஆபாசமாக விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் லியோ வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது விஜய் இந்த பாடல் வரிகள் குறித்த சர்ச்சைகளுக்கு பதில் கொடுத்தார். அவர் பேசுகையில் நான் ரெடி பாடலில் சில வரிகள் பிரச்சினை ஆச்சு. விரல் இடுக்குல தீ பந்தம் என்ற வரி பிரச்சினை ஆச்சு, அது ஏன் சிகரெட்டாகதான் இருக்க வேண்டும். பேனாவாக கூட இருக்கலாம்ல.
சினிமாவ சினிமாவாக பார்க்க வேண்டும். பள்ளி கல்லூரி அருகில் கூடதான் மதுக்கடைகள் உள்ளன. அதுக்குன்னு டெய்லி ரெண்டு ரவுண்ட் அடித்துவிட்டா பள்ளிகளுக்குச் செல்கிறார்கள்? ரசிகர்கள் பலர் தனது சக்திக்கு மீறி நல்லது செய்து வருகிறார்கள். தமிழகத்தில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளில் கூட உதவி வருகிறார்கள். எதிர்காலத்தில் எங்கு நல்லது நடந்தாலும் அது நம்ம பசங்க செய்ததாகத்தான் இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications