12 நாட்கள் விஜய்க்கு இப்படியொரு சிக்கல்? திமுக காபந்து அரசு தான் காரணமா? ஐவர் குழுவின் ரகசிய பிளான்
சென்னை: 12 நாட்கள் சிக்கலில் விஜய் உள்ளாராம்.. இந்த 12 நாள் தவெக பிரச்சார நெருக்கடி குறித்த தகவல்கள்தான் தற்போது வெளியாகியுள்ளன.. தமிழகத்தில் திமுக காபந்து அரசு மற்றும் போலீஸ் கெடுபிடிகளால் தனது பயணங்கள் முடக்கப்படுவதாக தவெக தலைவர் விஜய் கடும் அதிருப்தியில் உள்ளாராம்.. இதை பற்றின பிரத்யேக தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
தேர்தல் கிட்ட வந்துவிட்டது. அனைத்து தமிழக கட்சிகளும் உச்சக்கட்ட பிஶியில் உள்ளனர். அந்தவகையில் தவெக தலைவர் விஜய் மனுத்தாக்கல் விவகாரம் எல்லாம் முடிந்ததால், தன்னுடைய பிரச்சாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்..

விஜய் போட்ட பிளான்
ஆனால், திருச்சி கிழக்கில் வேட்பு மனுத்தாக்கல் செய்ததில் சில பல குளறுபடிகள் இருந்ததால் மீண்டும் தனது பிரமாணப்பத்திரத்தை திருத்தி மீண்டும் அதனை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.. இந்த பிரச்சனைகளால் பிரச்சாரம் செய்வதில் கவனம் செலுத்த முடியவில்லையாம்..
இதற்கிடையே, புதுச்சேரியில் வாக்குப்பதிவு நெருங்கியதால், அவசரம் அவசரமாக புதுச்சேரியில் பிரச்சாரம் செய்த விஜய், காவல்துறை போட்டிருந்த நிபந்தனைகளால் புதுச்சேரியில் அடங்கியுள்ள 30 தொகுதிகளுக்கும் சென்று அவரால் பிரசாரம் செய்ய முடியாமல் போனது.. இதே நிலைதான் தமிழகத்திலும் நீடிக்கிறது..
திமுக காபந்து அரசு
ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் வில்லிவாக்கத்திலும், புஸ்சி ஆனந்த் போட்டியிடும் தி.நகர் தொகுதியிலும் பிராச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது.. ஆனால், போலீஸ் விதித்த நிபந்தனைகளால் இந்த பிரச்சாரத்தையும் ரத்து செய்துவிட்டார் விஜய்..
இது குறித்து தவெக நிர்வாகிகளிடம் நாம் விசாரித்தோம். அவர்கள் நம்மிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.. ''விஜய்யின் பிரச்சார வியூகத்தை தடுக்க வேண்டும் என்று தான் தமிழக போலீஸ் திட்டமிடுகிறது.. அப்படியிருக்கும்போது அதை முறையடிப்பது எப்படி என விஜய்யை சுற்றியிருக்கும் அறிவு ஜீவிகள் ஆலோசிக்க வேண்டாமா?
வீடியோ ரெடியாகிறதா?
பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்பதும், பிறகு அதனை ரத்து செய்வதும் என தொடந்து இப்படி நடந்து கொண்டிருந்தால் மக்கள் மத்தியில் விஜய்யின் இமேஜ் சரிந் துவிடும்.. இதை அவரை சுற்றியிருப்பவர்கள் யோசிக்க வேண்டும். 12 நாட்களில் தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் விஜய் எப்படி பிரச்சாரத்தை செய்து முடிப்பார்? ஒரே நெருக்கடித்தான்'' என்றெல்லாம் நம்மிடம் குமுறி கொட்டுகிறார்கள்.
அதாவது 9-ந்தேதியை கடந்துவிட்டால் வாக்குப்பதிவுக்கு 13 நாட்கள் தான் இருக்கிறது.. 21-ந்தேதி மாலை 5 மணிக்குப் பிறகு பிரச்சாரத்திற்கு அனுமதி இல்லை.. அப்படி பார்த்தால் பிரச்சாரத்திற்கு வெறும் 12 நாட்கள் தான்.. இந்த 12 நாட்களில் தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் எப்படி பிரச்சாரம் செய்வது என்பதே விஜய்யின் கவலை..
எனவே, தமிழகம் முழுவதும் பிரச்சரம் செய்ய முடியுமா? என்று பு்ஸ்சி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ், அருண்ராஜ், சி.டி.நிர்மல்குமார் ஆகியரோடு ஆலோசனை செய்திருக்கிறார் விஜய். முடியும் என்று யாருமே அவருக்கு உத்தரவாதம் தரவில்லையாம்.
12 நாட்கள் மட்டுமே?
அப்போது விஜய், ''தேர்தல் நோட்டிஃபிகேசன் வந்துவிட்டாலே ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் தேர்தல் ஆணையத்தின் கட்டிப்பாட்டில் வந்துவிடும் தானே? அப்போது ஆளும் கட்சியான திமுக காபந்து அரசாக மாறிவிடும். அவர்களுக்கு அதிகாரம் இருக்காது. நாம் சுதந்திரமாக இயங்க முடியும் என நீங்கள் எல்லாம் சொன்னீர்கள். ஆனால், அப்படி எதுவும் நடப்பது போல தெரியவில்லையே? தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள போலீஸ் நமக்கு எதற்கு இவ்வளவு நெருக்கடி கொடுக்க வேண்டும் ? நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு கட்டுப்பாடுகள்? நிபந்தனைகள்? '' என்றெல்லாம் புலம்பினாராம்..
அதற்கு பு்ஸ்சி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட ஐவர் குழு, ''காபந்து அரசாக இருந்தாலும் திமுகவின் விசுவாசியாகத்தான் போலீஸ் இருக்குது. உங்களைக் கண்டு திமுகவுக்கு பயம். அதனால்தான் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கப் பார்க்கிறார்கள்.
நீங்க வொர்ரி பண்ணாதீர்கள். நீங்க பிரசாரம் செய்ய முடிந்தாலும், முடியாமல் போனாலும் தவெக வெற்றியை தடுத்து விட முடியாது சார். அவர்கள் தடுக்க தடுக்கத்தான் உங்களுக்கான ஆதரவு பெருகுகிறது. பிரச்சாரம் செய்ய முடியாமல் போனால், வாக்குபதிவுக்கு 2 நாட்களுக்கு முன்பு திமுக காபந்து அரசு உங்களை எப்படியெல்லாம் முடக்கியது என உருக்கமாகப் பேசி ஒரு வீடியோவை ரிலீஸ் செய்யலாம்'' என்று ஆலோசனை கொடுத்துள்ளார்களாம் அவரை சுற்றியுள்ள ஐவர் குழுவினர்..,..!!
- எழில்
-
அரசு பேருந்தில்.. வழித்தட டிஸ்ப்ளேவில் 'தவெக' என ஓடியதால் ஷாக்! போக்குவரத்துக் கழகம் விளக்கம் -
ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய விஜய்.. கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்து கிரேட் எஸ்கேப்! -
விஜய் தேர்தலில் தோல்வி அடைந்த பின்.. அந்த விஷயம் நடக்கும் பாருங்க.. அடித்து சொல்லும் பியூஷ் கோயல்! -
வில்லிவாக்கம் பெரிய ஏரியா கிடையாது.. நாளைக்கு விஜய் எப்படி சமாளிக்கப்போகிறார்? பதறும் பெற்றோர்கள்! -
ஈரோடு மணி 2500 ரூபாய் கொடுத்தாரா உஷார் 2 காரணங்கள் காங்கேயம் தேர்தலில் திருப்பூர் பரபரப்பு -
அடேங்கப்பா.. விஜய் ரெக்கார்டு.. பிரமாண பத்திரத்தை டவுன்லோடு செய்து பார்த்தவர்கள் எண்ணிக்கை இவ்வளவா? -
வேட்புமனுவை கரெக்டா நிரப்பி கொடுங்க.. தவெக வேட்பாளரை திருப்பி அனுப்பிய தேர்தல் அதிகாரி! -
இன்னுமா என்னை யாருனு தெரியலை.. கோபியில் செங்கோட்டையன் பக்கா பிளான்.. எடப்பாடிக்கு செக் -
லவ்வரை மிஸ் பண்ணுகிறேன்.. காதல் இல்லாத வாழ்க்கை! ஓபனாக திரிஷா போஸ்ட்! இப்படி சொல்லிட்டாங்களே! -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
விஜய் மனதில் பாஜக இருக்கிறது.. அடித்து சொல்லும் குஷ்பூ.. காரணம் தெரியுமா? -
விஜயை எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது! சின்ன வயசுல இருந்தே எனக்கு தெரியும்.. ஒய் ஜி மகேந்திரன் ஓபன்












Click it and Unblock the Notifications