எல்லா உரிமையும் இருக்கு.. உழைப்பால் உயர்ந்தவர்.. விஜய்யை பாராட்டாட்டி ஓகே.. திட்டாதீங்க.. ஓபிஎஸ் மகன்
சென்னை: இறக்குமதி செய்த வாகனங்களுக்கு வரிவிலக்கு கேட்பது அவரவரின் உரிமை சார்ந்தது. இந்த உரிமை நடிகர் விஜய்க்கும் உண்டு என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உழைப்பால் உயர்ந்தவர்களை அனைவரும் மனதார பாராட்ட வேண்டும் என்ற தலைப்பில் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் நடிகர் விஜய் தனது ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கோரியதற்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ 1 லட்சம அபராதம் விதித்திருப்பது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
|
சொந்த உழைப்பு
சினிமா துறையில் தனது சொந்த உழைப்பால் உயர்ந்து, தான் வாங்கும் ஊதியத்திற்கு முறையாக வருமான வரியாக கோடிக்கணக்கான பணத்தை அரசிற்கு செலுத்தி வருபவர் நடிகர் விஜய். அந்த பணம் பல ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிகரமாக இருந்துள்ளது. சினிமா துறையில் தனது சொந்த உழைப்பால் உயர்ந்து, தான் வாங்கும் ஊதியத்திற்கு முறையாக வருமான வரியாக கோடிக்கணக்கான பணத்தை அரசிற்கு செலுத்தி வருபவர் நடிகர் விஜய். அந்த பணம் பல ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிகரமாக இருந்துள்ளது.

நிறைகள் குறைகள்
எப்போதும் ஒரு மனிதரின் நிறைகளை குறைவாக பேசுவதும், சிறுசிறு குறைகளை மிகைப்படுத்தி பேசுவதும் மனித இயல்பாக இருக்கிறது. மேலும் இறக்குமதி செய்த வாகனங்களுக்கு வரிவிலக்கு கேட்பது அவரவரின் உரிமை சார்ந்தது. இந்த உரிமை நடிகர் விஜய்க்கும் உண்டு.

பொருந்தாது
சினிமா பிரபலம் என்றால் அவருக்கு பொருந்தாது என்றாகாது. இதே போல் 2012 ல் வரிவிலக்கு கேட்டு சச்சின் டெண்டுல்கர் உள்பட பலரும் கோரிக்கை வைத்தார்கள். இதில் சச்சினுக்கு சட்டத்திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு ரூ 1.13 கோடி வரி விலக்கு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

கருத்துகள்
எனவே சரிவர புரிந்து கொள்ளாமல் தவறான கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். எந்த மனிதராக இருந்தாலும் பல கஷ்டங்களையும் விருப்பு வெறுப்புகளையும் அவமானங்களையும் தாண்டிதான் உயர்நிலைக்கு வரமுடியும். அப்பேற்பட்டவர்களை பாராட்ட மனம் வரவில்லை என்றாலும் பரவாயில்லை குறைகள் கூறுவதை தவிர்க்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என ஜெயபிரதீப் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications