பெரிய அரசியல் ஸ்டேட்மென்ட் வரப்போகுது.. விஜய் போடும் மெகா திட்டம்.. அவங்களுக்குத்தான் ஆப்பாமே?
சென்னை: நடிகர் விஜய் மிகப்பெரிய அரசியல் ஸ்டேட்மென்ட் அல்லது அரசியல் உரை ஒன்றை நிகழ்த்த போவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக இதில் குறிப்பிட்ட சிலரை விமர்சனம் செய்து கூட விஜய் பேச வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் அரசியல் ஸ்டைலை பின்பற்ற துடிக்கும் நடிகர் விஜய்.. வாழ்த்துக்களை மட்டும் தினம் தினம் சொல்லி விமர்சனங்களில் சிக்கினார். நடிகர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அதிகம் அரசியல் பேச வேண்டும். வாழ்த்துக்களை மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்க கூடாது என்று கூறினார்.

பண்டிகைகள், தேர்தல் வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள் சொல்வதை மட்டும் செய்யாமல் அரசியல் நிலைப்பாடுகளை அறிவிக்க வேண்டும். நாடே நீட் காரணமாக கொதித்து போய் உள்ளது. விஜய் அதில் என்ன நிலைப்பாடு எடுக்கிறார்... இது போன்ற சமூக விஷயங்களில் விஜயின் நிலைப்பாடு என்ன?
கடுமையான விமர்சனங்கள்; விஜய் நேரடியாக முதல்வராக பார்க்கிறார் என்றால்.. அவரின் அரசியல் கொள்கைகள் என்ன? மத ரீதியான நிலைப்பாடு என்ன? சாதி அரசியலில் நிலைப்பாடு என்ன? அதோடு விஜய் தைரியமாக கருத்துக்களை வைக்க வேண்டும். கண்டனம் என்ற வார்த்தை கூட இல்லாமல் விஜய் சிஏஏ விஷயத்தில் அறிக்கை வெளியிட்டது கிண்டல் செய்யப்பட்டது. அதன்பின் அவர் எதிலும் கருத்தே சொல்லவில்லை. நெல்லை சாதி அட்டாக் தொடங்கி இவிஎம் விவகாரம் வரை பல விஷயங்கள் இருந்தும் விஜய் தைரியமாக கருத்துக்களை சொல்லவில்லை.;
பவன் தைரியமாக அம்மாநில முதல்வரையே எதிர்த்தார்.. ஆனால் விஜய் வெறும் வாழ்த்துக்களை மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்கிறார். நேரடியாக ஒருவர் முதல்வர் ஆகவே முடியாது.. மக்களிடம் தன்னுடைய அரசியல் எது என்று சொல்ல வேண்டும். இன்னும் சட்டசபை தேர்தலுக்கு 2 வருடம் கூட இல்லாத நிலையில்.. விஜய் இப்போதே இதெல்லாம் பேசினால்தான்.. 2 சீட்டாவது சட்டசபையில் வாங்க முடியும்.
பவன் படங்களை விஜய் ரீமேக் செய்துள்ளார். விஜய் படங்களை பவனும் ரீமேக் செய்துள்ளார். கொஞ்சம் அரசியலிலும் பவனை விஜய் ரீமேக் செய்தால் அவரின் தமிழக "வாழ்த்து" வெற்றி கழகத்திற்கு நன்றாக இருக்கும் என்றெல்லாம் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
அரசியல் கருத்துக்கள்; இப்படிப்பட்ட நிலையில்தான் சமீபத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.
இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்., என்று குறிப்பிட்டு உள்ளார். முதல்முறையாக வாழ்த்து சொல்வதை நிறுத்திவிட்டு.. கோபமாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பேச உள்ளார்; இது போக விரைவில் நடிகர் விஜய் மிகப்பெரிய அரசியல் ஸ்டேட்மென்ட் அல்லது அரசியல் உரை ஒன்றை நிகழ்த்த போவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக இதில் குறிப்பிட்ட சிலரை விமர்சனம் செய்து கூட விஜய் பேச வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அதன்படி அரசியல் ரீதியாக முக்கியமான ஒரு கருத்தை அவர் கோட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசுவார் என்கிறார்கள். ஆடியோ வெளியீட்டு விழா இந்த முறை பெரும்பாலும் நடக்கும் அதில் குட்டி கதை மூலம் அவர் அரசியல் கருத்தை சொல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு தன்னை சுற்றி நடக்கும் சில சர்ச்சைகளுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைக்க போவதாகவும், குறிப்பிட்ட ஒரு கட்சியை டார்கெட் செய்து பேச போவதாக தகவல்கள் வருகின்றன.
-
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications