பனையூர் வீட்டில் நிர்வாகிகளுடன் விஜய் திடீர் ஆலோசனை?.. அரசியலுக்கு வருகிறாரா?.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயின் பனையூர் வீட்டில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் புகைப்படம் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக நிர்வாகிகளிடம் என்ன பேசினார் என்ற கேள்வி எழுகிறது.

ரஜினிகாந்துக்கு அடுத்தது விஜய், சிம்பு, அஜித் உள்ளிட்டோரை அவர்களது ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்து வருகிறார்கள். இவர்களில் அஜித்துக்கும் அரசியலுக்கும் 7ஆம் பொருத்தம். அரசியல் என்ற வார்த்தையை தனது திரைப்படத்திலும் அவர் வைக்கமாட்டார்.

அந்த கதைகளிலும் அவர் நடிக்க மாட்டார். சிம்பு இப்போதுதான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார். அவருக்கு பெண் பார்க்கும் படலம் நடைபெற்று வருகிறது. இதனால் அவர் திருமணத்திற்கு பிறகு அரசியலில் ஈடுபட வாய்ப்புள்ளது.

பனையூர் வீடு

பனையூர் வீடு

விஜய் நிச்சயம் அடுத்த 2026 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த முறையே களம் காண தயாராக இருந்ததாகவும் ரஜினி கட்சியை தொடங்குவதால் தனது முடிவை விஜய் கைவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் விஜயின் பனையூர் வீட்டில் ஒரே கூட்டமாக இருந்தது.

மக்கள் இயக்கம்

மக்கள் இயக்கம்

இந்த பனையூர் வீடுதான் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகமாக செயல்படுகிறது. இங்கு விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி பனையூர் வீட்டிற்கு வருமாறு விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது.

மாற்றுக் கட்சி

மாற்றுக் கட்சி

இதையறிந்த அப்பகுதி விஜய் ரசிகர்கள் அவரை நேரில் காண நூற்றுக்கணக்கில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விஜய் மக்கள் மன்றத்தில் இருந்து வெளியேறி மாற்றுக் கட்சிகளில் இணைபவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் ஒரு கோரிக்கையை வைத்திருந்தார்.

ஆலோசனை

ஆலோசனை

விரைவில் நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும். எனவே மாற்றுக் கட்சிகளில் இணைய வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் விஜய் தனது நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் அவர்களுடன் புகைப்படமும் எடுத்து வருகிறாராம்.

பச்சைக் கொடி

பச்சைக் கொடி

இதனால் அரசியலுக்கு வருவது குறித்து விஜய் ஏதேனும் பச்சைக் கொடி காட்டினாரா என்ற சந்தேகம் எழுகிறது. நிர்வாகிகளிடம் அவர் என்ன பேசினார் என தெரியவில்லை. ஒரு வேளை இந்த தேர்தலையே அவர் சந்திக்க முடிவு செய்துவிட்டாரா என தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+