அரசியலுக்கு வர ஆயத்தமாகும் நடிகர் விஜய் - மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை
சென்னை அருகே பனையூரில் உள்ள தனது வீட்டில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோனை நடத்தியுள்ளார்.
சென்னை: நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் தகுந்த நேரத்தில் அரசியல் கட்சியாக மாறும் என்று விஜயின் தந்தை சந்திர சேகர் சமீபத்தில் கூறியிருந்த நிலையில் சென்னை அருகே பனையூரில் உள்ள தனது வீட்டில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக ஏற்கனவே பரபரப்பு தகவல்கள் வந்தன. சில மாவட்டங்களில் ரசிகர்களின் மாநாடுகளையும் நடத்தினார். ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி தமிழகம் முழுவதும் அதற்கு நிர்வாகிகளையும் நியமித்து உள்ளார். ரசிகர்கள் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை அருகே உள்ள பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் திடீரென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திருச்சி வடக்கு,திருச்சி தெற்கு,மதுரை வடக்கு, மதுரை தெற்கு நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை நடத்தியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுடனும் மகாராஷ்டிரா மாநில மக்கள் மன்ற நிர்வாகிகளுடனும் விஜய் ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications