விஜய் பேச்சை கவனிச்சீங்களா? அரசியலுக்கு வந்ததும் தெரிந்த பெரிய மாற்றம்! இப்படி பேசுனது இல்லையே

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் மற்றும் தமிழக முன்னேற்றக் கட்சி தலைவர் விஜயின் பேச்சில் இன்று நிறைய மாற்றங்கள் தெரிந்தன. இன்று சென்னையில் அவர் மாணவ மாணவிகளை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் ஆற்றிய உரை கவனம் பெற்றது.

திருவான்மியூரில் மாணவர்களை சந்தித்த விஜய் பேசுகையில் , போதைப்பொருள் பயன்பாடு அச்சமூட்டுகிறது. தமிழகத்தில் போதை பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது; ஒரு பெற்றோர் என்ற முறையிலும், அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையிலும் எனக்கு அச்சமாக உள்ளது.

actor vijay

சோஷியல் மீடியாவில் சிலர் புறணி பேசுகிறார்கள்; அதை எல்லாம் கவனத்தில் கொள்ளாதீர்கள். நல்லவர்களை கெட்டவர்கள் போலவும், கெட்டவர்களை நல்லவர்கள் போலவும் சித்தரிக்கிறார்கள்; வரும் செய்திகளில் எது உண்மை, எது பொய் என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

தலைவர்கள் இல்லை: நம்மிடம் எல்லாம் இருக்கிறது . நமக்கு தேவையான எல்லாம் இருக்கிறது. ஆனால் நம்மிடம் நல்ல தலைவன்தான் இல்லை. வாழ்க்கையில் என்னவாகப் போகிறோம் என்கிற தெளிவான எண்ணம் சிலருக்கு இருக்கும். சிலருக்கோ வாழ்க்கையில் அடுத்து என்ன என்பதில் முடிவெடுப்பதில் சிரமம் இருக்கும். அப்படியானவர்கள் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். எல்லா துறையுமே நல்ல துறைதான். நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் கடினமாக உழையுங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும்.

போதைப்பொருள் பயன்பாடு அச்சமூட்டுகிறது. தமிழகத்தில் போதை பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது. ஒரு பெற்றோர் என்ற முறையிலும், அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையிலும் எனக்கு அச்சமாக உள்ளது.

எல்லா துறையுமே நல்ல துறைதான். நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் முழு ஈடுபாட்டோடு 100% உழைப்பை போட்டால் வெற்றி நிச்சயம். அதனால் உங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுங்கள். Say NO to temporary pleasures. Say NO to drugs என்று மாணவர்கள் மத்தியில் விஜய் உரையாற்றினார்.

பேச்சில் மாற்றம்: நடிகர் மற்றும் தமிழக முன்னேற்றக் கட்சி தலைவர் விஜயின் பேச்சில் இன்று நிறைய மாற்றங்கள் தெரிந்தன. இன்று சென்னையில் அவர் மாணவ மாணவிகளை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் ஆற்றிய உரை கவனம் பெற்றது.

அவர் பேச்சில் பெரும்பாலும் பேசுவதை போல காமெடி கலந்து பேசினாலும் கொஞ்சம் அரசியல்வாதி போல மிடுக்காக பேச முயற்சி செய்தார்.

actor vijay

அரசியலில் பேசுவது போன்ற மொழி நடைக்கு விஜய் கொஞ்சம் மாறி இருந்தார். இசைவெளியீட்டு விழா போல அவரின் பேச்சுக்கள் இல்லை.

பேச்சுக்கு இடையே அரசியலை தூவுவது வழக்கம் என்றாலும் நேரடியாக யாரையும் தாக்கியது இல்லை. ஆனால் இந்த முறை தலைவர்கள் சரியில்லை என்று நேரடியாக தாக்கி பேசி இருந்தார். முதல் முறை அவரின் பேச்சில் சினிமாதனம் தாண்டி கூடுதல் முதிர்ச்சி தெரிந்தது.

இது மாணவர்களுக்கான மேடை என்பதால் வெளிப்படையாக அரசியல் பேச முடியவில்லை என்றாலும் தமிழ்நாட்டில் தீயாய் பரவும் போதை பொருள் பழக்கம் பற்றி அவர் பேசியது கவனம் பெற்றுள்ளது. முன்பு போல இல்லாமல் இந்த முறை நடிகர் மற்றும் தமிழக முன்னேற்றக் கட்சி தலைவர் விஜயின் பேச்சில் இன்று நிறைய மாற்றங்கள் தெரிந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+