அதிமுக எங்களை பார்த்து பயப்படுகிறது! பேச்சுக்கு இடையில் பிடிஆரை இழுத்து.. இப்பவே அடித்து ஆடும் விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயின் அரசியல் வருகையை, மாஜி அமைச்சர் ஜெயக்குமார் போன்றோர் எதிர்க்கிறார்கள்., அதிமுக தரப்பில் பதற்றம் உள்ளது. அதிமுக எங்களை பார்த்து பயப்படுகிறது. சீமானும் இதை கேள்வி எழுப்பி உள்ளார் என்று தமிழக வெற்றி கழக செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். அதற்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்சிக்கான சின்னம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் கட்சியின் கொடி கலர் அடர் சிவப்பு + மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

 Actor Vijay Tamizhaga Vetri Kazhagam stand on Tamil Nadu politics Exclusive Interview

தேர்தல் ஆணையத்தில் இந்த பெயர் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கட்சி தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கைதான் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜெகதீஸ்வரன் ஒன்இந்தியா: இது தொடர்பாக தமிழக வெற்றி கழக செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், ஒரு பக்கம் மத ரீதியான பிளவுகள் உள்ளன, இன்னொரு பக்கம் ஜாதி ரீதியிலான பிளவுகள் உள்ளன. இதை எல்லாம் மாற்ற வேண்டும். அதோடு அடிப்படையான சில விஷயங்களை கூட நாம் செய்வது இல்லை. ஊழல்களும் கூட அதிகரித்துவிட்டன. அமைச்சர் பிடிஆர் ஆடியோ கூட கேட்டோம். திமுக மீது என்று இல்லை. எல்லா தரப்பிலும்.. எல்லா கட்சி மீதும் ஊழல் புகார்கள் உள்ளன.

எங்களின் அறிவிப்பை சிலர் ஆதரிக்கிறார்கள். ஜெயக்குமார் போன்றோர் எதிர்க்கிறார்கள்., அதிமுக தரப்பில் பதற்றம் உள்ளது. அதிமுக எங்களை பார்த்து பயப்படுகிறது. சீமானும் இதை கேள்வி எழுப்பி உள்ளார். அவரின் தரப்பிலும்.. நாம் தமிழர் கேம்பில் பதற்றம் நிலவுகிறது. எல்லோரும் அணுக கூடிய தலைவராக விஜய் இருப்பார். மக்கள் எப்படி விரும்புகிறார்களோ அப்படி ஒரு தலைவராக விஜய் இருப்பார்.

அடுத்த 2 வருடம் இதற்கான பணிகளை செய்வார். அடுத்த 2 வருடம் கட்சி எடுக்க போகும் நிலைப்பாடுகளில் விஜய் உறுதியாக இருப்பார். திருமாவளவன் விஜயின் வருகையை வரவேற்று உள்ளார். அதே சமயம் ஏன் 2024 லோக்சபா தேர்தலில் நிலைப்பாடு எடுக்கவில்லை என்று கேட்டுள்ளார்.

2024 லோக்சபா தேர்தலில் யாருடைய வாக்கு வங்கியையும் கெடுக்க கூடாது. முக்கியமாக இந்தியா கூட்டணியின் வாக்கு வங்கியையும் கெடுக்க கூடாது. அல்லது திமுகவின் பி டீம் போல செயல்பட கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். 2024 எங்கள் இலக்கு கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் நிற்க மாட்டோம். 2026 தேர்தலில் நிற்போம். 2024 லோக்சபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு தர மாட்டோம். அவர் கட்சிக்கு வருவதை உறுதி செய்துவிட்டார்.

எங்களின் அரசியல் பயணம் எதை நோக்கி செல்லும் என்பதையும் சொல்வோம். அரசியல் மாற்றத்திற்கான கட்சியாக இது இருக்கும். வெறும் ஆட்சி மாற்றத்திற்கான கட்சியாக இது இருக்காது. அதனால் இந்த தேர்தலில் நாங்கள் நிற்கவில்லை.

அரசியலை அவர் தொழிலாக பார்க்கவில்லை. அவர் முழு நேரமாக சினிமா வேலைகளை முடித்துவிட்டு அரசியலுக்கு வர போகிறார். அவர் பல காலமாக மக்கள் பணியை செய்கிறார். இனி நேரடியாக முழுமையாக மக்கள் பணிகளை செய்ய போகிறார். இப்போது இதை அறிவிக்க வேண்டிய என்ன காரணம் என்ற கேள்வி இருக்கலாம், என்று தமிழக வெற்றி கழக செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+