கிளைமேக்ஸ்.. மாணவர்களை குஷிப்படுத்தும் விஜய்! கடைசி கட்ட மாணவர்கள் சந்திப்பு எப்போது? வெளியான தேதி
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் தமிழ்நாடு புதுச்சேரியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டி வருகிறார். இதுவரை மூன்று கட்டங்களாக மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் நாளை நான்காவது கட்டமாக நிறைவு விழா நடைபெற இருக்கிறது. இதில் சேலம், திருவண்ணாமலை, சென்னை, மதுரை, தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொள்ள இருப்பதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் 2023 ஆம் ஆண்டு முதன்முதலாக மாணவர்களை சந்தித்தார். கிட்டத்தட்ட 14 மணி நேரம் நின்று கொண்டே மாணவ மாணவிகளை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
அந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றதோடு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றது. கடந்த ஆண்டும் மாணவர்களை சந்தித்தார். பரிசு மட்டும் அல்லாது, அவர்களுக்கு விருந்து வைத்து புகைப்படம் எடுத்துக் கொள்வதோடு பெற்றோர்களையும் சந்தித்து வருகிறார்.

இதற்கிடையே கடந்தாண்டு நேரடி அரசியலுக்கு வந்த விஜய் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதே நேரத்தில் ரிசல்ட் வெளியான உடனே மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இருக்கும் என விஜய் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும், 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதை அடுத்து சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதை அடுத்து விஜய் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கோலகாலமாக நடத்தி வருகிறார். கடந்த 30ஆம் தேதி, அரியலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களையும், 2வது கட்ட விழா 4ஆம் தேதி அன்று நடைபெற்ற நிலையில், ராமநாதபுரம், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், தர்மபுரி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், மயிலாடுதுறை, விருதுநகர் மற்றும் புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளை சந்தித்து பரிசு வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து நேற்று செங்கல்பட்டு, கோவை, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, தென்காசி, புதுச்சேரி ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகளை சந்தித்து விஜய் சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கினார். இந்த நிலையில் நான்காவது கட்ட மற்றும் நிறைவு நிகழ்ச்சியாக விஜய் நாளை மாணவ மாணவிகளை சந்தித்து பாராட்டுகிறார்.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில," தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழக வெற்றிக்கழக தலைவர் மாணவர்களை நேரில் வரவழைத்து விருது வழங்கி பாராட்டி வருகிறார். முதல் கட்டமாக 30-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக நான்காம் தேதியும், மூன்றாம் கட்டமாக 13ஆம் தேதியும் பாராட்டு விழா நடைபெற்றது.
இதை அடுத்து நான்காம் கட்டமாக நிறைவு விழா மாமல்லபுரம் 4.5 ஷெரட்டானில் நாளை (15 ஆம் தேதி ) நடைபெற உள்ளது. இதில் சேலம், திருவண்ணாமலை, சென்னை, மதுரை, தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். எதிர்கால சமுதாயத்தின் மீது தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டுள்ள விஜய் இந்த பாராட்டு விழாவில் மாணவர் செல்வங்களுக்கு பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும் ஊக்க தொகையையும் வழங்கி பாராட்ட உள்ளார்" எனக் கூறப்பட்டுள்ளது.
-
White Paper: வரலாற்றிலேயே இதுவரை இல்லாத உச்சம்! தமிழகத்தில் தனிநபர் மீதான கடன் எவ்வளவு தெரியுமா? -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
மரிய வில்சன் கொடுத்த ஷாக்.. புதிய திட்டங்களுக்கு பிரேக் வருமா? அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை? -
போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை! -
ரிப்போர்ட்டில் ஷாக் விஷயமே இதுதான்.. வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் வில்சன் அதிர்ச்சித் தகவல்! -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை.. பட்ஜெட் வரை அடக்கமா இருங்க.. இல்லைன்னா காலி! -
செங்கோட்டையன் டக்னு விஜய் பாலாஜியை கட்டிப்பிடித்து, "தட்டி எறிஞ்சு கலக்கிட்டீங்களாமே"! அமைச்சர் குஷி -
எங்கே போனார்கள் சிங்கப்பெண்கள்? ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தமிழகத்தில் பேரதிர்ச்சி -
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு! 2வது மாதமாக பணத்தை போட்டது தவெக அரசு! -
தவெகவில் பனிப்போர்.. உழைத்தது நாங்க.. பவர் அவங்களுக்கா? மாவட்ட செயலாளர்கள் vs எம்எல்ஏக்கள் முட்டல்!












Click it and Unblock the Notifications