"2 கிராம் தங்கத்துக்காக!" கொச்சையாக பேசிய வேல்முருகன்! அசராத விஜய்! இன்றைய நிகழ்ச்சியை பார்த்தீங்களா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய், மாணவிகளை தொட்டு பேசுவதாக மிகவும் கொச்சையான வார்த்தைகளை கூறி தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சித்திருந்த நிலையில் அதை பற்றி விஜய் கவலைப்படவே இல்லை. அவர் வழக்கம் போல் தனது உடன்பிறவா தங்கைகளின் தோளில் கை போட்டபடியே புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

vijay

10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் பரிசையும் நடிகர் விஜய் வழங்கி வருகிறார். தற்போது 3 ஆவது ஆண்டாக வழங்கி வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரே நாளில் தமிழகம் முழுவதுமுள்ள மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கிய போது அவரால் நிற்க முடியாமல் டேபிளில் சாய்ந்தபடி இருந்தார். இதையடுத்து அடுத்த ஆண்டு 2024 இல் மாவட்ட வாரியாக பிரித்து வழங்கப்பட்டது.

அது போல் இந்த ஆண்டும் மாவட்ட வாரியாக பிரித்து வழங்கப்படுகிறது. அந்த வகையில் இன்று 3ஆம் கட்டமாக வழங்கி வருகிறார். ஏற்கெனவே இரு கட்டங்களாக மாமல்லபுரத்தில் இந்த விழா நடந்தது. கடந்த மாதம் 30ஆம் தேதி நடந்த விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4ஆம் தேதி 84 தொகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. முதலிடம் பிடித்தவர்களுக்கு வைரக் கம்மல், மாணவராக இருந்தால் வைர மோதிரம் பரிசாக வழங்கப்படுகிறது.

நண்பா நண்பி

கடந்த 4ஆம் தேதி கல்வி விருது வழங்கும் விழாவில் விஜய்யை இளைய காமராஜர் என்றெல்லாம் அழைத்தார்கள். இதனால் விஜய் சற்று கூச்சப்படுவது போல் அந்த மாணவரின் தந்தையின் தோளை பிடித்து அழுத்தினார். விஜய் தனது ரசிகர்கள் நண்பா, நண்பி என்றும் தங்கை, தம்பி என்றும் அழைப்பதுண்டு. அது போல் ரசிகைகளும் அவரை அண்ணா என்றுதான் அழைப்பார்கள். விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

பிரியம்

அதிக ஊதியம் வாங்கும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர். இந்த நிலையில் விருது வழங்கும் விழாவில் மாணவிகள் ஆர்வத்தினாலும் விஜய் அண்ணா மீதுள்ள பிரியத்தினாலும் அவரை கட்டி பிடித்தும், கைகளை பிடித்துக் கொண்டும் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.

உடன்பிறவா தங்கைகள்

tvk vijay

விஜய்யும் அவர்களை உடன் பிறவா தங்கைகளாகவே கருதி, மாணவிகளின் தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். இதனால் அந்த மாணவிகள் நெகிழ்ச்சி அடைகிறார்கள். பெரும்பாலானோர் இதை நல்லவிதமாகவே பார்க்கும் நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மட்டும் கொச்சையாக பேசியிருந்தார்.

தவெக கட்சி

அதாவது தவெக கட்சியின் தலைவரும் பண்ருட்டி எம்எல்ஏவுமான வேல்முருகன் கூறியிருப்பதாவது: "இரண்டு கிராம் தங்கத்துக்காக ஒரு கூத்தாடியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வைக்கின்றனர். இது தமிழனுக்கு அழகா. ஈனப்பிறவிகள்" என பேசி இருந்தார். வேல்முருகனின் இந்த பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகத்தினரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் தான் பேசியது சரிதான் மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக கூறியிருந்தார் வேல்முருகன்.

வேல்முருகன்

இன்று தவெகவின் 3ஆவது கட்ட விருது வழங்கும் விழா நடைபெறும் நிலையில் நேற்றைய தினம் விழுப்புரத்தில் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் விஜய் 3 ஆண்டுகளாக தான் மாணவர்களுக்கு பரிசு கொடுக்கிறார். நான் 25 ஆண்டுகளாக மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறேன்.

மேஜர் பெண்

மேஜரான பெண்களை சொந்த அப்பாவாக இருந்தாலும், மடியில் அமர வைக்க மாட்டோம். சித்தப்பா, பெரியப்பாவாக இருந்தாலும் சிறிய இடைவெளியுடன் இருப்போம். அதனால் அது தமிழர்களின் கலாச்சாரம் அல்ல. டிஸ்கோத் என்பது உருவாக்கப்பட்டு அரைகுறை ஆடைகளோடு ஆட அனுமதிக்கப்படுகிறது. ஈசிஆர், பாண்டிச்சேரியில் புதிய கலாச்சாரங்கள் உருவாகிறது. 3 பெண்களுக்கு தகப்பனாக சொல்கிறேன்.. என் இளைய சமூகம் கண் முன்னால் சீரழிவதை நினைத்து என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கத்தில் கூறினேன்.

விஜய் கட்டி பிடித்தது தவறு இல்லை

விஜய் கட்டிப் பிடித்ததை தவறு என்று சொல்லவில்லை.. நான் சொல்வது சினிமாக்காரர்களை கட்டிப்பிடிப்பது நமது கலாச்சாரம் இல்லை என்றுதான் சொல்கிறேன். தகப்பன் ஸ்தானத்தில் இருந்து கட்டிப்பிடிப்பதை நான் தவறு என்று சொல்லவில்லை.. ஆனால் திரைக் கதாநாயகன் என்றாலும் ஒரு distance பின்பற்ற வேண்டும் என கூறியிருந்தார்.

கை போட்டு புகைப்படம்

இதனால் இன்று நடைபெறும் விருது வழங்கும் விழாவில் விஜய், மாணவிகளின் தோளில் கை போட்டு புகைப்படம் எடுக்க மாட்டார் என சொல்லப்பட்டது. அது போல் தன்னை இளைய காமராஜர் என ஒரு பெற்றோர் சொன்னதால் நாடார் சங்கத்தினர் விஜய்க்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இன்று நடந்த நிகழ்ச்சியில் தன்னை யாரும் காமராஜர், இளைய காமராஜர் என்றெல்லாம் அழைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். எதிர்ப்புகளுக்கு செவிச்சாய்த்து அவர் அப்படி சொன்னதால், மாணவிகளிடமும் ஒரு distance maintain செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

அண்ணனாக

ஆனால் இன்று நடந்த விழாவில் விஜய் வழக்கம் போல அண்ணனாக, குழந்தைகளின் தகப்பனாக அந்த பெண் பிள்ளைகள் தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்தார். இது அன்பின் வெளிப்பாடு, இதை கொச்சைப்படுத்த ஒன்றும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+