சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன தவம் செஞ்சு புட்டோம்! அப்பாவால் அம்மாவைக் கூட பார்க்காத விஜய்? உண்மையான நிலவரம் என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை : கருத்து வேறுபாடு காரணமாக தற்போது வரை நடிகர் விஜய் தனது பெற்றோரை நேரில் சந்திக்கவில்லை எனவும், தந்தை மீதான கோபம் காரணமாக தனது தாய் ஷோபாவை கூட நடிகர் விஜய் இதுவரை நேரில் சென்று பார்க்கவில்லை என்கின்றனர் விவரம் அறிந்த திரையுலகினர்.

'தளபதி' என்று தமிழ் திரையுலகில் ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படும் நடிகர் விஜய், திரை உலகுக்கு வந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாகி உள்ளது. ஆனால் கதாநாயகனாக அவர் நடித்த நாளைய தீர்ப்பு திரைப்படம் வெளியான ஆண்டு 1992.

டிசம்பர் 4ஆம் தேதி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்த 'நாளைய தீர்ப்பு' திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவின் நம்பர் 1 நடிகராக உயர்ந்த விஜய்.. வெளியான பட்டியல் - இந்தியை தட்டிதூக்கிய தமிழ், தெலுங்கு இந்தியாவின் நம்பர் 1 நடிகராக உயர்ந்த விஜய்.. வெளியான பட்டியல் - இந்தியை தட்டிதூக்கிய தமிழ், தெலுங்கு

தளபதி விஜய்

தளபதி விஜய்

அந்த வகையில் 30 ஆண்டுகளை கடந்து இருந்தாலும் அதற்கு முன்னர் அவரது தந்தை இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த குடும்பம் 'வெற்றி' 'வசந்த ராகம்' 'சட்டம் ஒரு விளையாட்டு' ஆகிய படங்களை விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போதைய சூழலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக வசூல் சக்கரவர்த்தியாக திகழ்பவர் தளபதி விஜய் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு ரசிகர் பலத்திலும் சரி வசூல் சக்கரவர்த்தியாக திகழும் அவரது படங்கள் 100 கோடி 200 கோடி என வசூலில் சக்கை போடு போட்டு வருகின்றன.

எஸ்.ஏ.சந்திரசேகர்

எஸ்.ஏ.சந்திரசேகர்

ஆனால் ஆரம்ப காலத்தில் விஜயின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர் அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர். வாரிசு நடிகர், நடிக்க தெரியவில்லை, உருவ கேலி, ஆபாச வசனங்கள், ஆபாச காட்சிகள் என பல விமர்சனங்கள் இருந்தாலும் அவற்றை தூக்கி எறிந்து இன்று தமிழகத்தில் செல்ல பிள்ளையாக திகழ்வதற்கும் எஸ்.ஏ.சி தான் காரணம். மாண்புமிகு மாணவன், ரசிகன் உள்ளிட்ட அடுத்தடுத்து எடுத்து தள்ளி மக்கள் மத்தியில் விஜயை ஒரு நடிகராக நிலைநிறுத்தினார்.

 மாஸ் ஹீரோ

மாஸ் ஹீரோ

அதற்குப் பிறகு பூவே உனக்காக திரைப்படம் விஜய்யின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை, ஷாஜஹான் என காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாப்ட் ஹீரோவாக வலம் வந்த விஜய், பின்னர் திருமலை படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக மாறிய அவர் அடுத்தடுத்து கில்லி, சிவகாசி, திருப்பாச்சி ,போக்கிரி ,வேட்டைக்காரன் ,துப்பாக்கி, தலைவா, கத்தி, தெறி, மெர்சல், சர்க்கார் ,பிகில் மாஸ்டர், பீஸ்ட் என மாஸ் ஹீரோவாக நிற்கிறார்.

தந்தை மகன் மோதல்

தந்தை மகன் மோதல்

திரையுலகில் உச்சம் தொட்டாலும் அரசியல் ஆசை காரணமாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் தளபதி விஜய்க்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மகன் விஜய் பெயரில் கட்சி ஆரம்பித்ததாகவும் இதன் காரணமாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. தொடர்ந்து தந்தைக்கு எதிராக நோட்டீஸ் நீதிமன்ற வழக்கு என பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் தொடர்ந்து பல நாட்களாக நடிகர் விஜய் தனது தந்தையான சந்திரசேகரை சந்திக்கவில்லை.

அப்பாவை பார்க்கவில்லை

அப்பாவை பார்க்கவில்லை

கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்ஏ சந்திரசேகர் என்பதாவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அந்த நிகழ்ச்சியில் கூட விஜய் கலந்து கொள்ளாதது விமர்சனங்களை ஏற்படுத்தியது. அப்போது எஸ்.ஏ சந்திரசேகர் தனது மனைவி ஷோபாவுடன் தனியே கேக் வெட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியது. ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் தந்தையின் பிறந்தநாளுக்கு கூட நடிகர் விஜய் வர மாட்டாரா என கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

Recommended Video

    Vijay| விஜய் முன்ன மாதிரி கிடையாது.. அனைவரையும் எச்சரித்த SAC | *Rewind Raja
    தொலைபேசியில் பேச்சு

    தொலைபேசியில் பேச்சு

    ஆனாலும் கோவில் கோவிலாகச் சென்று எஸ்.ஏ.சந்திரசேகர் ஆயுள் விருத்தி ஹோமம் செய்ததோடு மகன் விஜய் பெயரில் அர்ச்சனை செய்து உருகி வேண்டிக்கொண்டார். இந்த நிலையில் தற்போது வரை நடிகர் விஜய் தனது பெற்றோரை நேரில் சந்திக்கவில்லை என கூறப்படுகிறது. தந்தை மீதான கோபம் காரணமாக தனது தாய் ஷோபாவை கூட நடிகர் விஜய் இதுவரை நேரில் சென்று பார்க்கவில்லை என்கின்றனர் விவரம் அறிந்த திரையுலகினர். அதே நேரத்தில் தந்தை மீது கோபம் இருந்தாலும் தாயுடன் வழக்கமாக தினமும் பேசி வருகிறாராம். என்னதான் தொலைபேசியில் பேசினாலும் நேரில் பார்ப்பது போல் வருமா என்கின்றனர் எஸ்ஏசிக்கு நெருக்கமானவர்கள்.

    English summary
    Actor Vijay has not met his parents in person until now due to differences of opinion, and actor Vijay has not even visited his mother Shobha due to his anger towards his father.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X