ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்த விஜய்.. அன்று என்ன சொன்னார் தெரியுமா? பிளாஷ்பேக்
சென்னை: நான் விஜய் பேசுறேன்.. உலகம் பூரா சட்டத்தை உருவாக்குனது மக்களோட கலாச்சாரத்தையும் உரிமையையும் பாதுகாக்கத்தான்..பறிக்கிறதுக்கு இல்லை .. ஜல்லிக்கட்டுக்காக நடிகர் விஜய் அன்று குரல் எழுப்பி இருந்தார்.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை விதிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக சென்னை மெரினாவில் புரட்சி வெடித்தது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதுமே தன்னெழுச்சியமாக மக்கள் போராடினார்கள். அந்த போராட்டத்திற்கு நடிகர் விஜய் வீடியோ வெளியிட்டுஆதரவு தெரிவித்திருந்தார். அந்த சம்பவத்தை இப்போது பார்ப்போம்.

ஜல்லிக்கட்டு போராட்டம் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. மக்கள் தன்னெழுச்சியாக போராடினார்கள். சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடி போராடினார்கள். மெரினாவில் கடல் பெரிதா, மக்கள் கூட்டம் பெரிதா என்றால், மக்கள் கூட்டமே பெரிது என்கிற அளவில் இருந்தது.
அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக, எதிர்க்கட்சியாக இருந்த திமுக என எல்லா கட்சிகளுமே ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்தன. எல்லா கட்சிகளுமே போராட்டத்தை ஆதரித்தன.
பிரதமர் மோடி உத்தரவு: இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்.இதன்படி சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு குடியரசு தலைவரும் அப்போது ஒப்புதல் அளித்தார். இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்காக சிறப்பு சட்டசபை கூட்டமெல்லாம் நடந்தது.

விஜய் கொடுத்த குரல்: முன்னதாக ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பல்வேறு நடிகர், நடிகைகள் ஆதரவு தந்தனர். நடிகர் விஜய்யும் ஆதரித்து வீடியோ வெளியிட்டார். அவர் தனது வீடியோவில், "எல்லாருக்கும் வணக்கம், நான் விஜய் பேசுறேன்.. உலகம் பூரா சட்டத்தை உருவாக்குனது மக்களோட கலாச்சாரத்தையும் உரிமையையும் பாதுகாக்கத்தான்..பறிக்கிறதுக்கு இல்லை.. தமிழனோட அடையாளம் ஜல்லிக்கட்டு. எதையும் எதிர்பார்க்காம, யாரோடு தூண்டுதலும் இல்லாமல், எந்தவிதமான கட்சி பேதமும் இல்லாமல், தமிழன் என்ற ஒரே உணர்வோடு போராட்டத்தில் கலந்து கொண்ட அத்தனை இளைஞர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன்" என்று நடிகர் விஜய் கூறியிருந்தார்.
தீர்ப்பு என்ன: சரி விஷயத்திற்கு வருவோம். பல பேர் போராடி, கஷ்டப்பட்டு தடையை நீக்கிய ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கோரி பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்று கூறியுள்ளது.

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் செல்லுபடி ஆகும் என தீர்ப்பு அளித்துள்ள உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரங்களில் ஒரு பகுதி என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு சட்ட திருத்தம் எந்த விதிமுறைகளையும் மீறும் வகையில் இல்லை என்றும் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் அரசியல் சாசன பிரிவு 14 மற்றும் 21 ஆகிய அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications