கோடி பேர் இருக்காங்க வெளில.. ராயப்பேட்டையில் மாஸ் காட்டிய விஜய்! பதறிப் போன பவுன்சர்கள்.. என்னா அடி!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னையில் இன்று நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் கலந்து கொண்டார். முன்னதாக எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் திரண்ட நிலையில் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பவுன்சர்கள் திணறினர். ஒரு கட்டத்தில் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் அவர்களே அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அதில் விஜய் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 15க்கும் மேற்பட்ட ஜமாத் நிர்வாகிகள், தமிழக அரசின் தலைமை காட்சி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது.
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்காக 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி, உலர் பழங்கள் ஆகியவை தயார் செய்யப்பட்டு தயாராக இருந்தது தொடர்ந்து. ஒய்சிஎம்சிஏ
மைதானத்தில் ஏராளமான நிர்வாகிகளும் இஸ்லாமியர்களும் குவிய ஆரம்பித்தனர். நேரம் செல்ல செல்ல அதிக அளவில் ரசிகர்களும் குவிந்தனர். சரியாக 5.20 மணிக்கு விஜய் அங்கு வந்தார்.
இஸ்லாமியர்களை போல தலையில் தொப்பி அணிந்து கைலி அணிந்து படி ரசிகர்களையும் கட்சியினரையும் பார்த்து உற்சாகமாக கையசித்தபடி வந்த விஜய் இஸ்லாமியர்கள் அழைத்துச் சென்றனர். இன்று விஜய் ரமலான் நோன்பு இருந்ததாகவும் 6:15 மணிக்கு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்த நிலையில் 5000க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர்.
இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல ராயப்பேட்டை ஒய்எம்சிஏ பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட அளவில் ஐந்து நிர்வாகிகள், அதுமட்டுமல்லாது ஜமாத் நிர்வாகிகள், சென்னை ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர்கள் என சுமார் 2000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் விஜய் வருகிறார் என கேள்விப்பட்டவுடன் அப்பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
விழாவிற்கு வருபவர்களை கட்டுப்படுத்த காவல்துறை மட்டுமல்லாது விஜய் தரப்பிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பவுன்சர்கள் தயார் செய்யப்பட்டிருந்தனர். ஆனால் விஜய் வந்தவுடன் அவ்வளவு நேரம் அமைதி காத்த கூட்டம் விழா நடக்கும் ஒய்எம்சிஏ அரங்குக்கு தடுப்புகளை தாண்டி எகிரி குதித்து சென்றது. இதை அடுத்து அவர்களை சமாளிக்க முடியாமல் பவுன்சர்கள் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கூட்டத்தில் புகுந்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
எவ்வளவோ முயன்றும் அவர்களை சமாளிக்க முடியாததால் பவுன்சர்கள் திணறிப் போயினர். ஒரு கட்டத்தில் ஆளை விட்டால் போதும் என அவர்களும் ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே விஜயை படம் பிடிக்க வந்த ஒளிப்பதிவாளர்கள் சிலர் தாக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. நிகழ்ச்சி முடிவடைந்த உடன் திறந்த பிரச்சார வேனில் விஜய் கையசைத்தபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் ராயப்பேட்டை பகுதியில் இருந்து அண்ணா சாலை வரை செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும், சாலையிலும், மேம்பாலங்கள் உள்ளிட்டவற்றில் நின்று கொண்டு விஜயை பார்த்து ரசிகர்கள் உற்சாகமாக கையை அசைத்தனர். இதனாஅல் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முதன் முறையாக சென்னையில் மையப்பகுதியில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சிக்கு விஜய் வந்திருந்த நிலையில் மக்கள் ஆதரவு அதிகம் இருந்தாலும், போக்குவரத்து நெரிசல் தள்ளுமுள்ளு என ஒரு சில சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது தவெக.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications