சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நம்பர் 2".. பிரபல "உச்ச நடிகரை" நாடுகிறாரா எடப்பாடி.. ஒரே கல்லில் 2 மாங்காய்? யார் சொல்றது பாருங்க

எடப்பாடி பழனிசாமி மற்றும் விஜய் அரசியல் குறித்து ரவீந்திரன் துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் விஜய்யை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தி கொள்ள நிறைய வாய்ப்பு உள்ளதாகவும், ஆனால், தன் அரசியல் முடிவை விஜய் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றும் ரவீந்திரன் துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் வெளியாவதை தமிழகத்தின், "அரசியல் வாரிசு" விரும்பவில்லை என்று சில தினங்களாகவே சிலர் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய் தன்னுடைய படத்திற்கு 'வாரிசு' என்று பெயர் வைத்ததே வில்லங்கம் என்றும், யாரை குறிப்பிட இந்த பெயரை வைத்துள்ளார் என்றும் சிலர் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இதனிடையே, அதிமுகவில் இருந்து விஜய்க்கு ஆதரவு குரல்கள் ஒலிக்க தொடங்கி உள்ளன.

பாஜக எதிர்ப்பில் தெளிவாக உள்ளார் ஸ்டாலின்! பாஜக பிளான் என்ன இருக்கும் தெரியுமா - ரவீந்திரன் துரைசாமிபாஜக எதிர்ப்பில் தெளிவாக உள்ளார் ஸ்டாலின்! பாஜக பிளான் என்ன இருக்கும் தெரியுமா - ரவீந்திரன் துரைசாமி

ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

இப்படிப்பட்ட சூழலில், உதய்நிதிக்கு எதிராக விஜய் சித்தரிக்கப்படுகிறாரா? அதிமுகவில் விஜய்க்கான வாய்ப்புகள் உள்ளதா? என்பன போன்ற சந்தேகங்களை அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியின் சுருக்கம்தான் இது: "முதல்வர் ஸ்டாலினும், ரஜினியும் ஒருவருக்கொருவர் உயரிய மரியாதையை தரக்கூடியவர்கள்.. அப்படி ஒரு மரியாதை தனக்கும் வேண்டும் என்பதுதான் விஜய் போன்றோர்களின் ஆசையாக இருக்கலாம்.. அதற்கான முயற்சிகளை எடுப்பதாக தெரிகிறது..

 சைக்கிளில் விஜய்

சைக்கிளில் விஜய்

ஆனால், ரஜினிக்கு இதெல்லாம் தானாகவே கிடைக்கக்கூடிய விஷயங்கள்.. புஸ்ஸி ஆனந்த் முயற்சியில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்தது, விஜய் மீதான மரியாதையை காட்டுகிறது.. இதே மரியாதை தமிழக அரசியலும் தனக்கு கிடைக்க வேண்டும் என்று விஜய் எதிர்ப்பார்ப்பதாக தெரிகிறது.. அதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு குறைவாகத்தான் இருக்கிறது.. காரணம், திமுக ஆட்சிக்கட்டிலில் தற்போது உள்ளது.. விஜய்யை வைத்து ஆட்சிக்கு இவர்கள் வரவில்லை.. விஜய்தான் பெட்ரோல் விலை கூடிப்போச்சுன்னு சைக்கிளில் போனார்..

 ராமராஜன்

ராமராஜன்

இப்படி சில அறிகுறிகளை காட்டினாலும், திமுக விஜய்யை பெரிய சக்தியாக மதிக்கவில்லை.. ஆனால், இப்போது அதிமுக விஜய்யை மதிக்கிறார்கள்.. எடப்பாடி + ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக உள்ள நிலையில், தன் பலத்தை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது.. விஜய்யும், அரசியலில் தனக்கு நுழைவு புள்ளி இல்லாமல் தடுமாறுகிறார்.. அதனால் அண்ணாவுக்கு எம்ஜிஆர் மாதிரி, ஜெயலலிதாவுக்கு ராமராஜன் மாதிரி, எடப்பாடி பழனிசாமிக்கு விஜய் போன்ற சக்தி தேவைப்படலாம்.

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

எடப்பாடிக்கு கட்சிக்குள் ஆதரவுகள் இருந்தாலும், தேர்வுமுடிவுதான் அனைத்தையும் தீர்மானிக்கும் என்பதால், விஜய் போன்றோரின் பலமும் தேவைப்படலாம்.. எனினும், இது விஜய்யும், எடப்பாடியும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு.. அதேபோல, இந்த யுக்தி நடைமுறை சாத்தியமா என்றும் யோசிக்க வேண்டி உள்ளது. ஒருவேளை தனிக்கட்சி ஆரம்பித்து 39 தொகுதிகளிலும் விஜய் தனித்தும் நிற்கலாம்.. யாரும் அதை தடுக்க முடியாது.. அப்படி தனித்து நின்றாலும் அது வரவேற்கப்பட வேண்டியதுதான்.. அதனால், எடப்பாடிக்கு ஆதரவா? அல்லது தனித்து போட்டியா? என்பதை எல்லாம் விஜய்தான் சொல்ல வேண்டும்..

வைகைச்செல்வன்

வைகைச்செல்வன்

பாஜகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி டீமுக்குள்ளேயே சிவி சண்முகம், முனுசாமி, போன்றோர் உள்ளனர்.. அதிமுகவுக்கு பாஜக மைனஸ் என்கிறார் சிவி சண்முகம்.. சிறுபான்மையினர் ஓட்டுக்கள் கிடைக்கவில்லை என்கிறார்.. கேபி முனுசாமி, வைகைச்செல்வன் போன்றோரின் நிலைப்பாடுகளும் இதுதான்.. மோடிக்கு எதிரானவர்களை கட்சிக்குள்ளேயே இருக்கிறார்கள்.. அதனால் அதிமுகவில் சீட்டுக்களை கேட்டு பெற்றாலும்கூட, தோற்கடிக்கதானே செய்வாங்க.. மோடி எதிர்ப்பு ஓட்டுக்களாக எடப்பாடி தரப்பே போய்விடுவது நல்லது என்று நினைக்கிறார்கள்.. ஒருவேளை மோடி ஆதரவு ஓட்டுக்கள் ஒன்றுசேர்ந்து மோடிக்கு வெற்றியாக அமைந்துவிட்டால் அதுவும் பாஜகவுக்கு நல்லதுதான்.. மோடி எதிர்ப்பில் எடப்பாடி மேலே வந்தாலும் நல்லதுதான்..

கனிமொழி

கனிமொழி

உதயநிதியை பொறுத்தவரை, ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக நம்பர் 2 என்ற நிலையில் கிடையாது.. ஸ்டாலின் கலைஞரை போல நீண்ட காலம் இருந்து அரசியல் செய்யக்கூடிய தலைவராக இருப்பார்.. அதில் மாற்றமேயில்லை.. அதேபோல, கட்சி பதவியில் கனிமொழிக்கு முக்கியத்துவம் தந்துள்ளதும் ஸ்டாலினுக்கு பிளஸ்தான்.. உதயநிதியும் ஸ்டாலினுக்கு பிளஸ்தான்.. உதயநிதியை வைத்து பவர்சென்டர் ஏறுகிறது, அதை வைத்து ஆட்கள் வருகிறார்கள்.. அதுவும் கட்சிக்கு பிளஸ்தான்.. இப்படிப்பட்ட சூழலில் உதயநிதிக்கு பதிலாக விஜய் என்று சிலர் கிளப்பி விடுகிறார்கள்..

பிரபாகரன்

பிரபாகரன்

அது தவறு... விஜய்க்கு அது அரசியல் லாபம் என்று நினைத்தால் அதுவும் தவறுதான்.. அரசியல் லாபம் என்று விஜய்க்கு இல்லை, ஒருவேளை திமுகவுக்கு எதிராக இப்படி கிளப்பிவிட்டால், அது அவர் சினிமாவுக்கு வேண்டுமானால் லாபமாக இருக்கலாம்.. அடுத்த ரஜினி என்று விஜய்யை சொல்லி வருகிறார்கள்.. அந்த இடத்துக்கு விஜய் தாராளமாக வரலாம்.. அதற்கு அவருக்கு தகுதி உள்ளது.. ஆனால், பிரபாகரனாக வருகிறாரா? ராஜீவ்காந்தியாக வருகிறாரா? அல்லது தேசியத்துக்காக வருகிறாரா? திராவிடத்துக்காக வருகிறாரா? என்பதெல்லாம் விஜய் எடுக்கும் முடிவை பொறுத்ததே" என்றார்.

English summary
Actor Vijays Political entry and Will Edappadi Palaniswami prove his victory in the MP elections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X