விஷால் சொன்ன வார்த்தை.. கோபமான நீதிபதி.. "Pass-ன்னு சொல்ல கூடாது.. இது ஒன்னும் ஷூட்டிங் கிடையாது

Subscribe to Oneindia Tamil

சென்னை: "Pass என்றெல்லாம் இங்கே சொல்லக்கூடாது.. கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டும் ஆம், இல்லை என சரியான பதிலை அளிக்க வேண்டும்.. ரொம்ப புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா?" என்று நீதிபதி, நடிகர் விஷாலுக்கு கண்டிப்புடன் அறிவுறுத்தியிருக்கிறார். என்ன நடந்தது?

நடிகர் விஷால், தன்னுடைய விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியரான அன்புச் செழியனிடம் பெற்ற ரூ.21.29 கோடி கடனை லைகா படத் தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது.

Vishal Madras High Court Actor Vishal

படத்தயாரிப்பு: இந்த தொகையை திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் எல்லா படங்களின் உரிமைகளையும் தங்களுக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, "வீரமே வாகை சூடும்" என்ற படத்தை தன்னிச்சையாக வெளியிடுவதாகக் கூறி விஷாலின் பட நிறுவனத்துக்கு எதிராக லைகா சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கின் குறுக்கு விசாரணைக்காக நீதிபதி பி.டி.ஆஷா முன்பாக நடிகர் விஷால் நேற்று நேரில் ஆஜரானார்... அப்போது லைகா நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி லைகா மற்றும் விஷால் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி கேள்விகளை எழுப்பினார்.

கேள்விகள்: அந்த கேள்விகளுக்கு விஷால் பதிலளித்தபோது, "இந்த ஒப்பந்தம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.. என்னிடம் வெற்றுப் பேப்பரில் கையெழுத்து வாங்கிவிட்டார்கள்" என்றார்.

இதைக்கேட்டு கோபமடைந்த நீதிபதி, "நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும்? ரொம்ப புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா? இது ஒன்னும் சினிமா ஷூட்டிங் கிடையாது.. கவனமாக பதில் சொல்லுங்க.." என்றார்.

உடனே விஷால், "பாஸ்..." (Pass... அதாவது கேள்விக்கு பதிலளிக்காமல் பாஸ் செய்வதாக கூறும் நோக்கில்) என்றார்..

அறிவுரை: இதனால் நீதிபதி, "இது போன்று Pass என்றெல்லாம் இங்கு சொல்லக்கூடாது... ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே பதிலளிக்க வேண்டும்.. சண்டக்கோழி 2 படத்தை வெளியிடும் முன்பாக பணத்தை 10 நாட்களுக்கு முன்பாகவே திருப்பித்தந்து விடுவதாக சொன்னீங்களா? லைகாவைத் தவிர வேறு யாரிடமாவது கடன் வாங்கியுள்ளீர்களா? என்று கேட்டார்.

இதற்கு விஷால், "ஆம்.. லைகாவால் தான் அந்த கடனை வாங்க நேரிட்டது" என்று பதிலளித்தார்..

எனினும் நேற்றைய தினம், குறுக்கு விசாரணை முழுமையாக முடிவடையாததால், இன்று வெள்ளிக்கிழமை 2ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்து, விஷாலை கோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+