கணவரின் உடலுக்கு அரசு மரியாதை கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி- விவேக்கின் மனைவி உருக்கம்
சென்னை: கணவரின் உடலுக்கு அரசு மரியாதை கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி என விவேக்கின் மனைவி அருள்செல்வி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக் நேற்று முன் தினம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மயங்கிய நிலையில் இருந்த அவருக்கு எக்மோ கருவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனிறி அவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு சினிமா பிரபலங்கள், திரைத்துறையினர், ரசிகர்கள் என பெரும்திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து மேட்டுக்குப்பத்தில் நடிகர் விவேக்கின் உடலுக்கு 78 குண்டுகள் முழங்க தமிழக அரசு மரியாதை அளிக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அவருக்கு இறுதி சடங்குகளை மகள் தேஜஸ்வினி செய்தார்.
இந்த நிலையில் இன்று காலை விவேக்கின் மனைவி அருள்செல்வி உள்ளிட்ட குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மனைவி அருள்செல்வி கூறுகையில் கணவரை இழந்து நிற்கும் நிலையில் எங்கள் குடும்பத்திற்கு துணையாக இருந்தவர்களுக்கு நன்றி.
பக்கபலமாக இருந்த மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் நன்றி. கணவரின் உடலை அரசு மரியாதையுடன் தகனம் செய்ததற்கு நன்றி. நீங்கள் கொடுத்தது மிகப் பெரிய கவுரவம். தமிழக அரசின் மரியாதையை நாங்கள் நன்றியோடு நினைத்து பார்ப்போம். கணவரின் இறுதிச் சடங்குகளை முடியும் வரை பயணம் செய்த அனைத்து ரசிகர்களுக்கும், காவல் துறை, ஊடகத்துறையினருக்கும் நன்றி என்றார் அருள்செல்வி.












Click it and Unblock the Notifications