என்ன இப்படி பட்டுன்னு சொல்லிட்டார் விவேக்.. எத்தனை பேர் இருக்காங்க சாரே உங்களுக்காக!
எனக்கென்று யாரும் இல்லை என்று நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார்
சென்னை: விவேக் எதுக்காக இப்படி ஒரு ட்வீட் போட்டார் என்றே தெரியவில்லை. எனக்கென்று யாருமே இல்லை என்று சொல்லிவிட்டார்!
நடிகர் விவேக் தமிழ் திரைப்பட உலகில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தை பிடித்திருப்பவர், செந்தில் கவுண்டமணி உச்சத்தில் இருந்தபோதும், சம நிலையில் சக நடிகரான வடிவேலு இருந்தபோதும், போட்டி போட்டு நடித்தவர்.. சிந்தனை, சிரிப்பு என்பதையும்தாண்டி மிகச்சிறந்த மனிதர். நல்ல படிப்பாளி.. அறிவாளி!
ஒரு கோடி மரக்கன்றுகளை நடுமாறு அப்துல் கலாம் கூறியதையடுத்து கிரீன் கலாம் என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வருகிறார் விவேக். இந்த சமூக சேவைக்கு பல தரப்பில் இருந்து அனைவரிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைதவிர, சமூக அவலங்கள், பிரச்சனைகள் தொடர்பாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

சோகம்
இவ்வளவு இருந்தும் சொந்த வாழ்க்கையில் பெரும் சோகம் விவேக்கை சூழ்ந்துள்ளது. தந்தையை இழந்த சில நாட்களிலேயே பெற்ற மகனையும் இழந்த துயரில் விழுந்தார். ஆனால் அதிலிருந்து அவரால் இன்னமும் மீள முடியவில்லை. அது இன்று அவர் பதிவிட்ட ட்விட்டரிலும் வெளிப்பட்டுள்ளது.
|
படத்தின் வெற்றி
Happy to know that vellaipookkal is still a grosser at seattle! Still housefull here! ஆனால்.. இந்த மகிழ்ச்சியைப் பகிர என் திரை ஆசான் KB, சமூக ஆசான் Dr.APJ, என் தந்தை, என் மகன் யாருமே இல்லை. (என் நண்பர்கள், ரசிகப் பெருமக்களைத் தவிர!)" என்று கூறப்பட்டுள்ளது.

யாருமே இல்லை
அதாவது, திரை ஆசான் கே.பாலசந்தர், சமூக ஆசான் டாக்டர் அப்துல்கலாம், தன் தந்தை, மகன் என யாருமே இல்லை என்றும், வெள்ளைப்பூக்கள் வெற்றியின் மகிழ்ச்சியை நண்பர்களிடமும் ரசிகர்களிடமும் மட்டுமே தன்னால் பகிர்ந்துகொள்ள முடியுமென்றும் பதிவிட்டுள்ளார்.
|
இளைஞர் பட்டாளம்
விவேக்கின் நெகிழ்ச்சியான டிவீட்டுக்கு பாசத்தைக் கொட்டி அவரது கவலையை கரைத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். மகன் இல்லாட்டி என்ன இளைஞர்கள் எல்லோருக்கும் நீங்க தந்தைதானே என்று பாசத்தை காட்டி விவேக்குக்கு தோள் கொடுத்துக் கொண்டிருக்கிறது இளைஞர் பட்டாளம்.
ஏலே டோன்ட் ஒர்ரி.. பீ ஹேப்பி!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications