விஜயகாந்த் பற்றி நேற்று ஒரு பேச்சு.. இன்று ஒரு பேச்சு! அரசியல்வாதியை மிஞ்சிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!
சென்னை: விஜயகாந்த் மரணம் பற்றி பேசமாட்டேன், மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டது பற்றி பேசமாட்டேன் என நேற்றைய தினம் பிடிவாதம் பிடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திடீரென இன்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை விஜயகாந்த் சமாதியில் அஞ்சலி செலுத்தி அரசியல்வாதிகளையே மிஞ்சும் வகையில் ஸ்டண்ட் அடித்திருக்கிறார்.
சென்னையில் பிரபல வெள்ளிப் பொருட்கள் கடை ஒன்றை நேற்று திறந்து வைக்கச் சென்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம், விஜயகாந்தின் மரணம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்க மறுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கடை திறப்பு விழா பற்றி மட்டும் தன்னிடம் கேள்விகள் கேட்குமாறு கூறினார். இருப்பினும் செய்தியாளர்கள் விடாமல் மீண்டும் கேள்வி எழுப்பியதை அடுத்து, விஜயகாந்த் மரணம் வருத்தம் தருவதாகவும் தாம் ஊரில் இல்லை என்றும் புதுச்சேரியில் இருந்ததால் தன்னால் அஞ்சலி செலுத்த வரமுடியவில்லை எனவும் காரணம் கூறினார்.

புதுச்சேரிக்கும் சென்னைக்கும் 3மணி நேர பயணத்தில் வந்துவிட முடியும் என்பதை கூட உணராமல் தாம் ஏதோ வெளிநாட்டு படப்பிடிப்பில் இருந்ததை போல் நான் ஊரில் இல்லை என சிம்பிளாக கூறினார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதைத் தொடர்ந்து நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு, ''நான் இப்போது தமிழில் தானே சொன்னேன், கடை திறப்பு விழா பற்றிய கேள்விகளை மட்டும் கேட்குமாறு'' என்று கடுகடுத்தார்.
பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயரை வைக்கும் விவகாரத்தில் எல்லோருடைய கருத்துத் தான் தனது கருத்து என பொத்தாம் பொதுவாக கூறினாரே தவிர, விஜயகாந்த் பெயரை தான் வைக்க வேண்டும் என அவர் கூறவில்லை. இந்த நிகழ்வு நடந்தது நேற்று. இந்நிலையில் தான் இன்று சென்னை கோயம்பேட்டியில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு அவர் குறித்து, ரொம்ப நல்லவர், ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றெல்லாம் உருக்கமுடன் பேசியிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications