கல்யாணத்துக்கு முன் கர்ப்பம்.. இப்போ தான் ‘கேட்டது’ கிடைச்சது! தீடீரென அமலா பால் சொன்ன வார்த்தை!
சென்னை: பிரபல இயக்குனர் விஜய் உடனான திருமண முறிவுக்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார் அமலாபால். சுமூகமாக அவர்களது திருமண வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் நிலையில் அவர் பேசி உள்ள கருத்துக்கள் சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன் தான் கேட்டது கிடைக்கவில்லை எனவும், தற்போது கடவுளிடம் கேட்டது கிடைத்திருக்கிறது என தனது கணவரை குறிப்பிட்டு இருக்கிறார். முன்னாள் கணவர் இயக்குனர் விஜயைத் தான் அவர் விமர்சித்துள்ளார் என கூறுகின்றனர்.
தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலேயே பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகை அமலா பால். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அவர் வேலு பிரபாகரனின் சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பிக் பாஸ் மூலம் புகழ்பெற்ற ஹரிஷ் கல்யாண் அந்த படத்தின் நாயகன்.
மாமனாருடன் முறையற்ற உறவில் இருக்கும் மருமகளை பற்றிய கதை அது.படம் வெளிவந்த போது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆனால் அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு தனது அடுத்த படங்களில் கவனம் செலுத்தினார் அமலா பால்.

பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. கவர்ச்சி நடிகை என்ற பெயர் மாறி, திறமையான நடிகை என்ற பெயரை பெற்று கொடுத்தது. அதற்குப் பிறகு அவரது சினிமா வாழ்க்கை டாப் கியரில் தான் சென்றது. தமிழில் விஜய், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் கரம் கோர்த்தார். தொடர்ந்து தெலுங்கு, கன்னட படங்களிலும் வாய்ப்பு கிடைத்தது.
அப்படி விஜய்யுடன் நடித்த தலைவா திரைப்படத்தில் தான் அவருக்கு காதல் வாழ்க்கையும் அமைந்தது. படத்தின் இயக்குனரான ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமலாபால். ஆரம்பத்தில் விஜய் குடும்பத்தில் பிரச்சனை வந்ததாகவும் அதற்குப் பிறகு சமாளித்து அமலா பாலை திருமணம் செய்து கொண்டார் ஏஎல் விஜய்.
அதற்கு பிறகும் சினிமாவில் நடித்த நிலையில் திடீரென அமலா பால் விஜய் தம்பதி பிரிந்தது. சினிமாவில் நடிப்பது தொடர்பாக இருவருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து இருவரும் பிரிந்ததாக சொல்லப்பட்டது. இடையே ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட அமலா பால் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார்.
திடீரென தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தது ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியது. ஜகத் தேசாய் என்பவரை தான் காதலிப்பதாகவும் அவருடன் உறவில் இருப்பதாகவும் அறிவித்தார். தொடர்ந்து கர்ப்பமாக இருக்கும் போது திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.
இந்த நிலையில் தனது திருமண வாழ்க்கை குறித்து ஊடகம் ஒன்றிடம் பேசியிருக்கிறார் அமலாபால். அதில் பேசியுள்ள அவர்," நான் கடவுளிடம், 'கடவுளே ஏன் எனக்கு மட்டும் இப்படி பாய் ஃப்ரெண்ட்ஸ அனுப்புற. நான் எவ்வளவு ஸ்வீட்டான பெண். நான் எல்லோரையும் சர்ப்ரைஸ் செய்கிறேன். இவ்வளவு லவ் பண்றேன். எனக்கு மட்டும் ஏன் இவங்கள் அனுப்புற' என புகார் செய்தேன்.என்னை சர்ப்ரைஸ் செய்யும், என்னை டேட்டுக்கு அழைத்து செல்லும் பாய் ஃப்ரெண்ட் வேண்டுமென்று நான் கடவுளிடம் கேட்பேன். அதற்கு பிறகுதான் ஜகத் தேசாயை கடவுள் அனுப்பினார்" எனக் கூறியிருக்கிறார்.
அதாவது கடவுளிடம் நான் கேட்ட தகுதிகளை கொண்ட கணவர் ஜெகத் தேசாய் என அமலா பால் கூறி இருக்கிறார். அதே நேரத்தில் ஏ விஜய் அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளார் என்றும் கூறுகின்றனர் நெட்டிசன்கள்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications