18 வயசுதான்.. முழுசா நம்பினேன்.. கட்டிப்பிடித்தார், முத்தமிட்டார்.. பரபரக்கும் அனன்யாவின் புகார்
நடிகை மாயாகிருஷ்ணன் மீது நடிகை அனன்யா மீடூ புகார் அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: "அப்போது எனக்கு வயசு 18. மாயாதான் எனக்கு எல்லாம்... முழுசா நம்பினேன்... ஆனால் ஒரு கட்டத்தில் என்னை கட்டிப்பிடித்தார். முத்தமிட்டார். பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தினார்" இப்படி குற்றச்சாட்டுகளை மாயாகிருஷ்ணன் மீது அடுக்கி கொண்டே செல்கிறார் அனன்யா.
'வானவில்' என்ற படத்தில் அறிமுகமானவர்தான் மாயா கிருஷ்ணன். தொடர்ந்து தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ரஜினிகாந்த்தின் 2.0 படத்திலும் மாயா நடித்து வருகிறார். இவர் மீதுதான் நடிகை அனன்யா ராம்பிரசாத் மீ டூ புகார் அளித்துள்ளார்.

நெருக்கம் ஆனோம்
இது தொடர்பாக அனன்யா தனது பேஸ்புக் பக்கத்தில், "2016-ல் மாயாவை நான் முதன்முதலாக பார்த்தபோது எனக்கு வயது 18. நிறைய ஆலோசனை சொல்லவும் அவரை நான் முழுவதுமாக நம்பினேன். கொஞ்ச நாளிலேயே இரண்டு பேரும் நெருக்கமாகி விட்டோம்.

கட்டிபிடித்தார்
ஒரு கட்டத்தில் மாயா என்னை ரொம்பவே ஆட்டி படைத்தார். என் சம்பந்தப்பட்ட முடிவுகளையும் அவரே எடுத்தார். என் நண்பர்கள், பெற்றோரை என்னிடமிருந்து பிரித்தார். என்னை மொத்தமாக ஆக்கிரமித்து கொண்டார். ஒரு கட்டத்தில் என்னை கட்டிப்பிடித்தார். முத்தமிட்டார். பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தினார்.

தவறாக நடந்து கொண்டார்
அவருடன் ஒரே ரூமில் ஒரே மெத்தையில் தூங்கினோம். அப்போதெல்லாம் இரவில் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். அவரது பாலியல் தொல்லைகளை அனுபவித்த நாட்கள் என் வாழ்வில் கொடுமையான நாட்கள். இன்னும் அந்த துயரமான நினைவுகளிலிருந்து நான் மீளவே இல்லை. அது சாதாரண விஷயம் என்றாலும் அது அவறு என்பதை பின்னாளில் நான் உணர்ந்தேன். பிறகு விலகி மனநல டாக்டரிடம் இதுக்காக சிகிச்சை பெற்றேன்" என்று தெரிவித்துள்ளார்.

ஆண்கள் மீது ஆண்கள்
மீ டூ ஆரம்பிக்கப்பட்டு, இதுவரை ஆண்கள் மீது பெண்கள் குற்றச்சாட்டுகளை சாட்டி வரும் நிலையில், ஆண்கள் ஆண்கள் மீதும், பெண்கள் பெண்கள் மீதும் பாலியல் புகார்களை கூற தொடங்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications