சின்ன வயசுல மது குடிக்கிறாங்க..டாஸ்மாக்கை மூடுங்க.. சொல்றது யார் தெரியுமா? பாஜக காயத்ரி ரகுராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : இன்று தமிழகத்தில் சிறு வயது குழந்தைகளே மதுகுடிப்பதாகவும், மது பாலினத்தையோ வயதையோ பார்க்காமல் இறுதியில் உங்களை மனதளவிலும் உடலளவிலும் மெதுவாகக் கொன்றுவிடுகிறது எனவும், டாஸ்மாக் கடைகளை தடை செய்ய வேண்டிய நேரமிது என நடிகையும், பாஜக கலாச்சார பிரிவு தலைவருமான காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

செங்கல்பட்டு அருகே அரசுப் பள்ளி சீருடையில் உள்ள மாணவிகள் சிலர் பேருந்திலேயே மது அருந்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த வீடியோ காட்சிகளில் பள்ளி முடிந்து பேருந்தில் செல்லும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் பீரை குடித்துக் கொண்டு சென்றனர்.

அதிர்ச்சி வீடியோ

அதிர்ச்சி வீடியோ

சுமார் ஒரு நிமிடம் இருந்த அந்த வீடியோவில் பீரை மற்ற மாணவர்களுக்கும் பகிர்ந்து குடிப்பதோடு கூச்சலிட்டு கொண்டே அராஜகத்தில் ஈடுபட்ட வீடியோவை செல்போனில் படம்பிடித்த சிலர் அந்த வீடியோவை முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸப் என அனைத்து வலை தளங்களிலும் பதிவிட்டு பரப்பியதால் பரபரப்பு நிலவியது.

மாணவிகள் அராஜகம்

மாணவிகள் அராஜகம்

இந்த மாணவ, மாணவிகள் செங்கல்பட்டு அருகே உள்ள பொன் விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருவது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் சமூக வலை தளங்களில் பேசும்பொருள் ஆகியுள்ள நிலையில் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகளும் அறிவுரைகளும் காவல்துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.

பலரும் கண்டனம்

பலரும் கண்டனம்

தமிழகம் முழுவதும் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளனர். பள்ளி மாணவர்களை சீரழிக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் சிறு வயது குழந்தைகளே மதுகுடிப்பதாகவும், டாஸ்மாக் கடைகளை தடை செய்ய வேண்டிய நேரமிது என நடிகையும், பாஜக கலாச்சார பிரிவு தலைவருமான காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

காயத்ரி ரகுராம் ட்விட்டர்

காயத்ரி ரகுராம் ட்விட்டர்

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், "மது உங்கள் மனம், உங்கள் பணம், உங்கள் வாழ்க்கை முறை, உங்கள் வேலை, உங்கள் திறமை, உங்கள் ஆரோக்கியத்தை ஆதிக்கம் செலுத்துகிறது. இது உங்கள் வலியை போக்கவோ அல்லது நினைவுகளை போக்கவோ செய்யாது. அது அதிக வலியையும் நினைவுகளையும் தருகிறது. இது முதலில் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதிக்கிறது, பின்னர் அது சமூகத்தை பாதிக்கிறது. டாஸ்மாக்கை தடை செய்யும் நேரம் இது." என பதிவிட்டுள்ளார்.

டாஸ்மாக்குக்கு தடை

டாஸ்மாக்குக்கு தடை

மற்றொரு பதிவில் "இன்று சிறிய வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதை விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் நினைத்துக் குடிக்கிறார்கள்.. மது உங்கள் வயதையோ பாலினத்தையோ பார்க்காது அது இறுதியில் உங்களை மனதளவிலும் உடலளவிலும் மெதுவாகக் கொன்றுவிடுகிறது. கெட்ட நேரங்களைத்தான் சந்திப்பீர்கள். #டாஸ்மாக்கை தடை செய்யுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+