நான் சொன்னதே வேற.. ஏமாத்துனது "அவரு" இல்லை.. ஆண்ட்ரியா திடீர் திருப்புமுனை விளக்கம்!
அரசியல்வாதியுடன் காதல் குறித்து நடிகை ஆண்ட்ரியா விளக்கம் அளித்துள்ளார்
சென்னை: தன்னை காதலித்து ஏமாற்றியவர் அரசியல்வாதி நடிகர் இல்லை என்று நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா விளக்கம் அளித்துள்ளார்.
"ப்ரோக்கன் விங்க்" என்ற தலைப்பில் கவிதை புத்தகம் ஒன்றை நடிகை ஆண்ட்ரியா எழுதி இருக்கிறார். இந்த புத்தக வெளியீடு சமீபத்தில் பெங்களூரில் நடந்தது.
அப்போது, இந்த நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா பாட்டு பாடினார்.. அவரே பாடல்களை எழுதி.. இசையமைத்து பாடினார்.. எல்லாமே லவ் ஸாங்தான்.. கவிதைகள் காதல் தோல்வி, காதல் தோல்வியின் வலி என்று இருந்தன.

காதல் தோல்வி
ஏன் இப்படி திடீர்ன்னு லவ் சோகத்தில் ஆண்ட்ரியா மூழ்கிவிட்டார் என்று யாருக்குமே அப்போது புரியவில்லை.
ஒருவேளை இவர் எங்காவது காதல் தோல்வியில் விழுந்துவிட்டாரோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. தான் திருமணம் ஆன நபரால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன், அதனால் நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த துன்புறுத்தலுக்கு அவரால் பாதிக்கப்பட்டேன் என்றும் ஆண்ட்ரியா அப்போது சொன்னார்.

சினிமா உலகம்
மேலும் "broken wings" புத்தகத்தில் எல்லாவற்றை பற்றியும் சொல்லி உள்ளேன்.. அதில் அந்த நபரை பற்றின தகவல்களை தெரிவிக்க போகிறேன் என்று சொல்லவும், புத்தகத்தை வெளியிட விடாமல் தடுக்கும் முயற்சிகளும் நடப்பதாக கூறப்பட்டது. அதனால் யார் அந்த அரசியல்வாதி & நடிகர் என்று ரசிகர்கள் ஆர்வம் காட்டப்பட்டதுடன், சினிமா உலகில் இது மிகுந்த சர்ச்சையானது. இந்நிலையில், தற்போது அது குறித்து ஆண்ட்ரியாவே ஒரு விளக்கத்தை தந்துள்ளார்.

இலக்கியம்
"பெங்களூரூவில் ஒரு இலக்கியம் தொடர்பான விழா நடந்தது.. என்னுடன் தோழி அனுஜா இருந்தார்.. ஒரு எழுத்தாளராக வரவேண்டும் என்று என்னிடம் சொன்னார்.. அவர் அப்படி அழைப்பு விடுத்த சமயம், என் முன்னாடி செய்தியாளர்கள் இல்லை, கேமராக்களும் இல்லை.. அதனால் ஒரு நடிகை என்பதையே நான் மறந்துவிட்டு, சில விஷயங்களை தைரியமாகவும், வெளிப்படையாகவும் அப்போது சொன்னேன்.. ஆனால் நான் அப்படி சொல்லி இருக்கக்கூடாது.

அரசியல்வாதி
ஒரு புத்தகத்தில் இருந்து ஒரு கவிதை வாசித்தேன்.. ஏன் இப்படி ஒரு சோகமான கவிதை என்று அங்கிருந்தவர்கள் கேள்வி கேட்க, 10 வருஷத்துக்கு முன்னாடி நடந்த என் காதல், அதன் தோல்வி பற்றி சொன்னேன்.. அந்த கவிதை அப்போது எழுதியது. விஷயம் இதுதான்.. ஆனால் அதற்குள் எப்படி எப்படியோ திரித்து சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.. அதுவும் என்னை ஒரு அரசியல்வாதி லவ் பண்ணி ஏமாற்றி விட்டதாகவும், அதனால்தான் காதல் தோல்வி பற்றி எழுதியிருப்பதாகவும் செய்தி பரவியது.

கற்பனை
இதையெல்லாம் பார்த்து எனக்கே ஆச்சரியமாகிவிட்டது.. இதுக்கு எப்படி நான் விளக்கம் தருவது? அதான் அமைதியாக இருந்துவிட்டேன்.. அப்படி எந்த விஷயமும் எனக்கு நடக்கவில்லை.. அரசியல்வாதி என்ற வார்த்தையைகூட நான் சொல்லவில்லை.. கற்பனையை கிளப்பி விட்டுள்ளனர்.. என்னை காதலித்தவர் அரசியல்வாதியாக இருக்கும் நடிகர் இல்லை.." என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications