மறு மார்பகத்திலும் பரவிய புற்றுநோய்! எதுக்கு உயிரோட இருக்கணும்! அங்காடி தெரு சிந்து கண்ணீர்
சென்னை: இன்னொரு மார்பகத்திலும் புற்றுநோய் வந்துவிட்டது. விஷால் போன்றோர் பண உதவி செய்தால் அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிடுவேன். நான் உயிருடன் இருப்பதற்கு சாவதே மேல் என அங்காடி தெரு சிந்து கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
அங்காடி தெரு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சிந்து. இவர் சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு கொரோனா காலத்தில் மார்பக புற்றுநோய் வந்ததால் ஒரு பக்கம் மார்பகம் எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தும் புற்றுநோயுடன் போராடி வருகிறார். சிகிச்சைக்கும் பணம் இல்லாமல் தவித்து வருகிறார்.
இது குறித்து அங்காடி தெரு சிந்து ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் இன்னமும் புற்றுநோயால் போராடிக் கொண்டேதான் இருக்கிறேன். தினமும் கடவுளிடம் நான் வேண்டிக் கொள்வது ஒன்றுதான். என்னை அழைத்துக் கொள்... இல்லாவிட்டால் நிம்மதியாக வாழ விடு.

நானும் சித்திரவதை அனுபவித்து கொண்டு என்னுடன் இருப்பவர்களையும் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நிறைய பேருக்கு மார்பக புற்றுநோய் வந்து குணமாவதாக சொல்கிறார்கள். அதற்கு எத்தனையோ பேர் எடுத்துக்காட்டாக உள்ளனர். ஆனால் உண்மையில் புற்றுநோய்க்கு ஒரு மருந்தே இல்லை. சின்னக்கட்டிதான் என் மார்பகத்தில் வந்திருந்தது.
மார்பு மேல் சிறியதாகவே இருந்தது. கொரோனா நேரத்தில் மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை செய்த போது அது நீர்க்கட்டி என்றுதான் சொல்லி தட்டிக் கழித்தார்கள். நானும் மக்கள் பணியில் இருந்ததால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. செகண்ட் ஒபீனியன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு தோன்றவில்லை.
ஒரு பெரிய ஊசியை எடுத்து மார்பில் குத்தி அதில் இருந்து சதையை எடுத்து பயாப்சிக்கு கொடுத்தார்கள். அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. அடுத்த வாரமே கட்டிகள் பரவின. அதிலிருந்து நீர் வந்து வலி ஏற்பட்டது. என் நண்பர் ஒருவர் மூலம் மருத்துவரை அணுகினேன். என்ன ஏது என கேட்காமலே அவர் புற்றுநோய் என கூறி என் மார்பகத்தை கசாப்பு கடையில் அறுப்பது போல் அறுத்துவிட்டார்.
என்னால் 10 முதல் 20 நிமிடங்கள் வரை உட்கார முடியும். அதற்கு மேல் முடியாது. இரவு நேரத்தில் படுக்க முடியாது மூச்சுத்திணறல் ஏற்படும். நுரையீரலில் வேறு தண்ணீர் ஏறிக் கொண்டது. இதற்காக பின்பக்க முதுகில் தோள் பட்டை எலும்புக்கு கீழ் ஓட்டை போட்டு 3 லிட்டர் வரை தண்ணீர் எடுத்தார்கள். 10 நாட்களுக்கு மாத்திரை மட்டுமே 7000 செலவானது.
கழிப்பறை செல்ல கூட எனக்கு ஒருவர் உதவி தேவைப்படுகிறது. அடிக்கடி தொல்லை செய்ய முடியாது என்பதால் குழந்தைகள் போல் டயாபர் வைத்துக் கொள்கிறேன். அதற்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை செலவாகிறது. சினிமாவில் சம்பாதித்த காசுகளை எல்லாம் இல்லாதோருக்கு உதவி செய்து விட்டேன். உறவினர்கள் எல்லாம் கொடுத்து உதவ மாட்டார்கள்.
உடம்பு முழுக்க தண்ணீர் சேர்ந்துவிட்டது. இடது கை செயலிழந்துவிட்டது. ஒரு சிறிய துணியை கூட எடுப்பதற்கு அந்த கையில் உணர்ச்சி இல்லை, சாப்பிடுவதும் கால்கழுவுவதும் வலது கையில்தான். கஞ்சிதான் குடித்து வருகிறேன். வேறு எந்த உணவும் சாப்பிட முடியாது. இத்தனை இம்சைகளுக்கு மத்தியில் நான் இருப்பதை விட சாவதே மேல்.
இன்னொரு மார்பகத்திலும் புற்றுநோய் பரவிவிட்டது. வலியை என்னால் தாங்க முடியவில்லை. விஷால் போன்றோர் சிகிச்சை உதவினால் அந்த மார்பகத்தையும் அகற்றிவிடலாம். என்னிடம் பணமே இல்லை. பெரிய நடிகர்கள் எனக்கு உதவி செய்யுங்கள் என கண்ணீர் மல்க சிந்து கேட்டுக் கொண்டுள்ளார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications