கணவர் டைகர் பிரபாகரிடம் கடைசியாக சொன்ன வார்த்தை.. அவர் இறந்தப்போ ஃபாலோ செய்தேன்.. நடிகை பேபி அஞ்சு
சென்னை: என் கணவர் டைகர் பிரபாகர் இறந்த போது அவரிடம் சொன்னதை நான் நிறைவேற்றினேன் என நடிகை பேபி அஞ்சு தெரிவித்துள்ளார்.
உதிரி பூக்கள் படத்தில் நடிகை அஸ்வினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பேபி அஞ்சு. சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அஞ்சு பின்னர் சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். கேளடி கண்மணி, எங்கள் சுவாமி அய்யப்பன், அரங்கேற்ற வேளை உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் அவரது மணவாழ்க்கை குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டி அளித்திருந்தார்.

தமிழ் படங்கள்
அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ் படங்களில் எனக்கு வாய்ப்பு கிடைக்காததால் கன்னட திரையுலகிற்கு சென்றேன். அப்போது அங்குதான் எனக்கு டைகர் பிரபாகரின் அறிமுகம் கிடைத்தது. அவ்வப்போது அவரை சந்திப்பேன். நாளடைவில் அவரும் நானும் காதலித்தோம்.

வயது மூத்தவர்
இந்த காதலுக்கு எனது குடும்பத்தார் கடும் எதிர்ப்பு. காரணம், எனக்கு 17 வயது அவருக்கு 45 வயது. அதாவது எனது தந்தையைவிட டைகர் பிரபாகர் பெரியவர். எனினும் பெற்றோர் எதிர்ப்பை மீறி 1995 இல் அவருடன் தனியாக வசிக்கத் தொடங்கினேன். சில மாதங்களில் அவருடைய சுய ரூபம் தெரிந்தது. ஒரு நாள் நாங்கள் வசிக்கும் வீட்டிற்கு ஒரு டீன் ஏஜ் பையன் வந்தார்.

டைகர் பிரபாகர்
அவர் டைகர் பிரபாகரை கேட்டார். நான் நீங்கள் யார் என கேட்டேன். அதற்கு அந்த பையன், நான் அவருடைய மகன் என்றார். எனக்கு அதிர்ச்சி அளித்தது. அப்போதுதான் டைகர் பிரபாகருக்கு ஏற்கெனவே திருமணமாகி அவருக்கு என்னை விட பெரிய பிள்ளைகள் கல்லூரி படிக்கும் பிள்ளைகள் இருப்பது தெரியவந்தது.

4ஆவது மனைவி
இது குறித்து கேட்ட போது எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்தில் அவருக்கு நான் 4 ஆவது மனைவி என தெரியவந்தது. அந்த நேரத்தில் நான் கர்ப்பமாக இருந்தேன். எனவே எனது குழந்தையின் நலன் கருதி அவருடன் வாழ்ந்தேன். எனக்கே 17 வயது, அப்படியிருக்கும் போது இன்னொரு பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

2 மாத குழந்தை
இது எனக்கு தெரியவந்ததும், இவரை விட்டு பிரிவதுதான் நல்லது என நினைத்தேன். இதனிடையே எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. நாளுக்கு நாள் எனது கணவரின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. இதனால் எனது மகன் பிறந்து 2 மாதங்கள் கழித்து அந்த வீட்டை விட்டு வெளியேறினேன்.

கடைசியாக சொன்னது இதுதான்
அப்போது அவரிடம் கடைசியாக ஒன்றை சொல்லிவிட்டு வந்தேன். இனி நீங்கள் செத்தாலும் நான் உங்கள் மூஞ்சில் விழிக்க மாட்டேன். அது போல் நான் செத்தாலும் என்னை வந்து பார்க்கக் கூடாது என கூறிவிட்டு வந்தேன். பின்னர் இரு ஆண்டுகளில் அதாவது எனது மகனுக்கு இரண்டு வயது இருந்த போது எனக்கு ஒரு போன் வந்தது.

அஞ்சு உருக்கம்
அதில் டைகர் பிரபாகர் இறந்துவிட்டார் என்றார்கள். உடனே எனது அம்மா, என்னிடம் வா போய் பார்த்துவிட்டு வரலாம் என்றார், நான் முடியாது என சொல்லிவிட்டேன். காரணம் நான் அவரிடம் சொல்லிவிட்டு வந்த வார்த்தைதான். அதனால் அவரது முகத்தை கூட நான் கடைசி வரை பார்க்கவே இல்லை. எனது மகனும் அறியாத பையன். பின்னாளில் அவர் நடித்த படங்களை காட்டி இவர்தான் உன் டேடி என சொல்வேன். அதற்கு என் மகன் பெரிதும் ஆர்வம் காட்டாமல் போய்விடுவான். இவ்வாறு அந்த பேட்டியில் தனது மண வாழ்க்கை குறித்து அஞ்சு பகிர்ந்து கொண்டார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications