சீமானுக்கு குட்நியூஸ்? நடிகை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு.. மார்ச் 3ல் விசாரணை
சென்னை: நடிகை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவுக்கு தடைக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு நாளை மறுநாள் (மார்ச் 3) விசாரணைக்கு வர உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருபவர் சீமான். இவர் மீது கடந்த சில ஆண்டுகளாக நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். திருமணம் செய்வதாக கூறி சீமான் ஏமாற்றிவிட்டார். கருக்கலைப்பும் செய்தேன் என்று நடிகை கூறி வருகிறார்.

மேலும் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு சீமானை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதுதொடர்பாக நடிகை புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுத்தாக்கல் செய்தார்.
ஆனால் சீமானின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். அதோடு பாலியல் புகார் தீவிரமானது.இதனை விசாரிக்க போலீசாருக்கு உரிமை உள்ளது. போலீசார் விசாரித்து 12 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு சீமானுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து பெங்களூரில் வசிக்கும் நடிகையிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதேபோல் நேற்று இரவு சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சீமானிடம் போலீசார் 1 மணிநேரம் 15 நிமிடங்கள் வரை விசாரித்துவிட்டு அனுப்பினர்.
இதற்கிடையே தான் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைக்கோரியும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், ‛‛இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் முன்வைத்த வாதங்களும், அனைத்து அம்சங்களும்
முறையாகக் கருத்தில் கொள்ளவில்லை. எனவே இந்த விவகாரத்தில் முன்னதாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இதுதவிர விசாரணையை போலீசார் 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் சீமானின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி சீமானின் மேல்முறையீட்டு மனு என்பது நாளை மறுநாள் (மார்ச் 3) ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிபி நாகரத்தினா, சதிஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் மனு என்பது விசாரணைக்கு வர உள்ளது. இதனால் வரும் 3ம் தேதி சீமானுக்கு குட்நியூஸ் வருகிறதா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications