எப்ப பார் சந்தேகம்.. ஹேமந்த்தால் ஏற்கெனவே தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சித்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சித்ராவை ஹேமந்த் எப்போதும் சந்தேக கண்ணோட்டத்திலேயே பார்த்ததால் ஏற்கெனவே ஒரு முறை அவர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

Recommended Video

    சென்னை: நடத்தையில் சந்தேகம் செத்துப்போ... சித்ரா வழக்கில் ஹேம்நாத் கைது!

    சின்னத்திரை சித்ரா என்ற பெயரை காட்டிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை என்ற பெயர்தான் அனைவர் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது. இவர் ஹேமந்த் என்ற ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் குடும்பச் செலவுகள் முழுவதையும் சித்ராவே கவனித்து கொண்டு வந்ததால் அவர் ஹேமந்த்தை திருமணம் செய்ய சித்ராவின் குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது.

    ஹேமந்த்

    ஹேமந்த்

    எனினும் அதையும் மீறி இருவருக்கும் நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்காக ஹேமந்த் குடும்பத்தினர் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லையாம். இது சித்ராவின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சித்ரா திருவான்மியூரில் ஒரு வீடு வாங்கியுள்ளார். ஆடி கார் வாங்கியுள்ளாராம்.

    மாத தவணை

    மாத தவணை

    இவற்றை வங்கி லோன் மூலம் வாங்கியுள்ளார். இதற்கு மாத தவணைகள் கட்ட வேண்டும். குடும்பத்தை கவனித்து கொள்ள வேண்டும். ஹேமந்த்தும் அவரது கடனை அடைக்க அவ்வப்போது சித்ராவிடம் காசு வாங்கி வந்ததாக தெரிகிறது. இதனால் சித்ராவால் அவரது வீட்டு செலவுகளை பூர்த்தி செய்ய முடியவில்லை.

    பிரச்சினை

    பிரச்சினை

    இந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் கிடைத்த சிறு வாய்ப்பாக இருந்தாலும் அதை பயன்படுத்தி நடித்து சம்பாதித்து கொடுக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு சித்ரா தள்ளப்பட்டார். சித்ரா யாருடன் நடித்தாலும் ஹேமந்த்திற்கு சந்தேகம் ஏற்பட்டதாம்.

    தொழில் நடிப்பது

    தொழில் நடிப்பது

    அதனால் நீ இனி நடிக்க வேண்டாம் என சித்ராவிடம் தெரிவித்தாராம். ஆனால் சித்ராவோ வீடு, காருக்கு எல்லாம் கடன் வாங்கியுள்ளேன். அதை அடைக்க வேண்டும். எனது தொழில் நடிப்பது. இதை நான் நிறுத்திவிட்டு என்ன செய்வது? என சித்ரா கேட்டுள்ளார்.

    டான்ஸ் ஆடினாய்?

    டான்ஸ் ஆடினாய்?

    இது போல் ஒவ்வொரு முறையும் சித்ரா ஷூட்டிங் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் போதும் அவரிடம் இன்று யாருடன் நடித்தாய், யாருடன் நெருக்கமாக டான்ஸ் ஆடினாய் என்பது போன்ற கேள்விகளையெல்லாம் கேட்பாராம். இதனால் மனமுடைந்த சித்ரா ஒரு கட்டத்தில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+