சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது.. சித்ரா ஹோட்டல் ரூம் சிசிடிவி கேமிரா வேலை செய்யவில்லையா.. அதிர்ச்சியில் உறைந்த போலீசார்!

சித்ரா தங்கியிருந்த ஓட்டல் அறையின் சிசிடிவி கேமரா சரியாக வேலை செய்யவில்லை.

Google Oneindia Tamil News

சென்னை: சித்ரா தங்கி இருந்த ஹோட்டல் ரூம் அருகே இருந்த சிசிடிவி கேமிரா வேலை செய்யவில்லையாம்.. இப்படி ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது,

கடந்த சில தினங்களாகவே 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலுக்கான ஷூட்டிங் விடிகாலை வரை நடந்து வந்துள்ளது.. அதனால்தான், திருவான்மியூரில் பெற்றோருடன் வசித்து வந்த சித்ராவால், அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு ஷூட்டிங்கில் பங்கேற்க முடியவில்லை.

இதற்காகவே கரையான்சாவடியில், ஹேமந்த் வீட்டில் தங்கி, கொஞ்ச நாள் ஷூட்டிங் சென்று வந்தாராம்.. அதுவும் சரிப்பட்டு வராததால், ஷூட்டிங் நடக்கும், பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில், ஒரு தனியார் ஹோட்டலில் ஹேமந்துடன் தங்கி, ஷூட்டிங் சென்று வந்துள்ளார்.

சித்ராவின் முகத்தில் இருந்த நகக்கீறல்கள் யாருடையது? பிரேத பரிசோதனையில் வெளியான பரபரப்பு தகவல்!

 நடமாட்டம்

நடமாட்டம்

இது ஒரு ஸ்டார் ஓட்டலாகும்.. சித்ரா தற்கொலை செய்து கொண்டபோது, மணி விடிகாலை 3.30 என்கிறார்கள்.. வழக்கமாக ஸ்டார் ஹோட்டலில் ஆட்கள் நடமாட்டம் இருக்கும்.. அந்த வகையில் இந்த ஓட்டலிலும் நிறைய பேர் இருந்தபோதே இந்த தற்கொலை நடந்துள்ளது. சித்ரா தூக்கில் தொங்கியதை பார்த்ததும், அதிர்ச்சி அடைந்த ஹேமந்த் ஓட்டல் மேனேஜர் கணேசனை உதவிக்கு அழைத்து, பிறகுதான் சித்ராவின் சடலத்தை இருவரும் சேர்ந்து படுக்கையில் கிடத்தி உள்ளனர்.. அதனால் கணேசனிடமும் விசாரணை நடக்கிறது.

 ஆய்வு

ஆய்வு

மேலும் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் உள்ள சிசிடிவி காமிராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தவும் போலீசார் முயன்றுள்ளனர்.. அந்த வகையில், சித்ரா தங்கி இருந்த ரூம் அருகே உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, அந்த சிசிடிவி கேமராக்கள் சரிவர இயங்கவில்லை என கூறப்படுகிறது... இதனாலேயே போலீசாரின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாம்.

 விசாரணை

விசாரணை

இதுகுறித்து ஹோட்டல் மேனேஜர் கணேசனிடம் கேட்டபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக தெரிகிறது.. பின்னர், கணேசன் மற்றும் ஹோட்டலில் பணிபுரியும் ஸ்ரீதர் உட்பட 3 பேரை ஸ்டேஷன் அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சென்னை புறநகர் பகுதிகளில் போலீசார் தொடர்ந்து சிசிடிவி கேமராக்களை பொருத்தி வரும் நிலையில், இப்படி பிரபல ஹோட்டலில் அதுவும் ஸ்டார் ஓட்டலில் சிசிடிவி கேமரா சரியாக செயல்படாமல் இருப்பது போலீசாருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாவி

சாவி

சித்ரா கதவை உள்பக்கமாக தாழிட்டு கொண்டபோது, ஹேமந்த்தும், கணேசனும் மாற்று சாவி கொண்டு திறந்து உள்ளே போனதாக சொல்லி உள்ளனர்.. ஆனால், சித்ரா தங்கியிருக்கும் ரூமுக்கு சாவி கிடையாதாம்.. வெறும் கார்டுதான்.. அந்த ரூம் கதவும் ஆட்டோமெடிக்காக லாக் என்று சொல்லும், தானாகவே மூடிக் கொள்ளக்கூடியது.. ஆனால், சித்ராதான் உள்பக்கமாக கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டதாக ஹேமந்த் சொல்கிறாராம்.. இதுவும் குழப்பமாக இருந்து வந்தநிலையில், சிசிடிவி கேமராவும் வேலை செய்யாதது மேலும் குழப்பத்தை தந்து வருகிறது.

English summary
Actress Chithra incident and CCTV cameras not work in Hotel
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X