டிவிஸ்ட்.. இந்த "2 பேரும்" தந்த தொடர் மனஉளைச்சலே.. சித்ராவின் முடிவுக்கு காரணம்.. போலீஸ் ஷாக் தகவல்!
சித்ராவின் தற்கொலைக்கு காரணம், கணவர், தாயார் தந்த மன அழுத்தம் என கூறப்படுகிறது
சென்னை: நடிகை சித்ரா தற்கொலைக்கு யார் காரணம், என்ன காரணம் என்று 3 நாட்களாக விழிபிதுங்கி உள்ள நிலையில், சித்ராவின் கணவரும், சித்ராவின் அம்மா விஜயா இருவரும் தந்த மன அழுத்தமே காரணம் என்று போலீசார் தற்போது தெரிவித்துள்ளனர்.
சித்ராவின் மரணம் நடந்து இன்றுடன் 3 நாட்களாகிறது.. சித்ராவுடையது கொலையா? தற்கொலையா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்து வந்தது.
சித்ரா கன்னத்தில் காயங்கள், தற்கொலைக்கான காரணம், திருமண சிக்கல்கள் இதையெல்லாம் வைத்து, பல்வேறு குழப்பங்கள், சந்தேகங்கள் நிலவி வந்தன. அனைத்துமே போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரியவந்துவிடும் என்றும் நம்பப்பட்டது.

தற்கொலையே
இறுதியில், குடும்ப பிரச்சனை காரணமாகவே சித்ரா இந்த முடிவை எடுத்ததாகவும், இது கொலையல்ல, தற்கொலையே என்றும் முதல்கட்ட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது யார் என்ற அடுத்த கட்ட விசாரணையில் போலீசார் இறங்கினர்.

சாவடிச்சிட்டான்
முன்னதாக, சித்ரா மரணத்துக்கு காரணம் என்னவென்று தெரிய வேண்டும் என்று அவரது அப்பா போலீசில் புகார் தந்திருந்தார்.. அதேபோல சித்ராவின் அம்மாவும், "மகளை சாவடிச்சிட்டான்" என்று ஹேமந்த் மீது குற்றம் சாட்டியிருந்தார். ஏற்கனவே, ஹேமந்த மீது சந்தேகங்கள் குவிந்து வந்த நிலையில், சித்ரா அம்மா சொன்ன குற்றச்சாட்டு மேலும் அதிர்ச்சியை கிளப்பியது.

கிடுக்கிப்பிடி
இதனால், போலீசார் ஹேமந்திடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.. இன்று 3வது நாளாக கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.. ஹேமந்த், அப்போது பல தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளாராம்.. இதையடுத்து, சித்ரா தற்கொலைக்கு கணவர் ஹேமந்த் ரவி , தாயார் விஜயா என 2 தரப்பிலும் கொடுத்த மன அழுத்தமே முக்கிய காரணம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை
அதுமட்டுமல்ல, ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று ஹேமந்த் ரவி, சித்ராவிடம் பலமுறை சண்டை போட்டிருக்கிறாராம்.. கடந்த 2 நாட்ளாக சீரியல் நடிகர், நடிகைகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்ட பிறகு, இது தெரியவந்துள்ளது... மேலும் ஹேமந்த் குடித்துவிட்டு அடிக்கடி பிரச்சனை செய்துள்ளார் என்று போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

போன்
அதேபோல, சித்ராவின் அம்மா விஜயா, ஹேமந்த்தை பிரிந்து வர சொல்லி தொடர்ந்து சித்ராவுக்கு போன் செய்து சொல்லி கொண்டே இருந்தாராம்... ஒரே ரூமில் ஹோட்டலில் இருவரும் தங்குவதுகூட விஜயாவுக்கு ஏற்கனவே பிடிக்கவில்லை என்று செய்திகள் கசிந்த நிலையில், சித்ராவின் அம்மா அதிக அளவு மன உளைச்சல் தந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மெசேஜ்கள்
இதனிடையே, சித்ராவின் செல்போனில் உள்ள ஆதாரங்கள், மெசேஜ்கள் அழிக்கப்பட்டுள்ளதாம்.. யார் இதை செய்தார்கள் என்று தெரியவில்லை.. எனவே, சைபர் கிரைமுக்கு சித்ராவின் செல்போன் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.. இந்நிலையில், 3-வது நாளாக, சித்ராவின் கணவர் ஹேமந்த்திடம் இன்றும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications