நடிகையின் "விபச்சாரம்".. மொத்தம் 4 பேராமே.. அலறி அடித்து போலீசுக்கு ஓடி.. ஒரே பரபரப்பு.. என்னாச்சு?
விபச்சாரத்தில் தள்ளி கட்டாயப்படுத்துகிறார்கள் என்று நடிகை புகார் தந்துள்ளார்
சென்னை: விபச்சாரத்தில் தள்ளி டார்ச்சர் தருகிறார்கள் என்று ஒரு நடிகை, சென்னை போலீசுக்கு சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சினிமாவில் எப்படி ஒரு ஹீரோ, நிலைத்து நிற்க எழுதப்படாத சில வரையறைகளும், விதிமுறைகளும் இருக்கிறதோ அதுபோலவே, ஹீரோயின்களுக்கும் பல எழுதப்படாத விதிகள் தமிழ்த்திரை உலகில் இருக்கின்றன.
ஹீரோக்கள் உடல் பருமனாக இருந்தாலும்சரி, ஒல்லியாக இருந்தாலும் சரி, கருப்பு, சிவப்பு, மாநிறங்களில் வலம் வந்தாலும் சரி, எதுவுமே கண்டுகொள்ளப்படுவதில்லை..

ஹீரோ
70 வயதானாலும் மனசாட்சியே இல்லாமல் ஹீரோவாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் 50, 60 வயது ஹீரோவாக நடிப்பதிலும் பிரச்சனையில்லை.. பேத்தி வயது ஹீரோயின்களுடன் நடிக்க ஆர்வம் காட்டுவதுதான் வேதனையிலும் வேதனை.. அதிலும் ஹீரோயின் என்றாலே, வெள்ளை தோல், கட்டுக்கோப்பான உடல்வாகுடன் இருக்க வேண்டும் என்பது மாற்றப்படாத விதி.. இவர்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டால், ஹீரோயின் சான்ஸ்கள், அடுத்த செகண்டே மாயமாகிவிடுவதும் நடைமுறை இயல்பாக உள்ளது.

பிரியாமணி
நேற்று முன்தினம் நடிகை பிரியாமணி ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், தமிழ் திரையுலகில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து வெளிப்படையாகவே பேசினார்.. சில நடிகைகள் வலுக்கட்டாயமாக கிளாமர் ரோலுக்கு தள்ளப்படுவதாக தெரிவித்திருந்தார்.. அவர் சொன்னதாவது: "மும்பையில் பொதுவாகவே கதாநாயகிகள் என்றில்லாமல் எல்லோருக்குமே அங்கு உடல்வாகும், நிறமும் இயற்கையாகவே அப்படியே இருக்கும். ஆனால், தமிழகத்தில் அப்படி கிடையாது. அதைப் புரிந்து கொள்ளாமல் அந்த நெருக்கடி நிலைக்குத் தமிழ்த் திரைப்பட கதாநாயகிகள் தள்ளப்பட்டார்கள்...

நடிகை பிரியாமணி
ஆனால் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி இருக்கிறது.. வடக்கிலும் நமது நிறத்தை விரும்புகிறார்கள். நமது திறமையை மதிக்கிறார்கள் என்று கூறியிருந்தார். பிரியாமணியின் இந்த துணிச்சல் பேச்சு பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரு நடிகை போலீசுக்கு ஓடியுள்ளார்.. சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் அந்த துணை நடிகை.. 20 வயதாகிறது.. பாக்யராஜ் இயக்கிய உலக சாதனை 369, அகத்தியன் குறும்படம், மற்றும் சில விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

ஸ்னேகா
அதில் தன்னுடைய தோழி மூலம் அறிமுகமான சினேகா, பிரகாஷ், ரியா, நந்தினி ஆகிய 4 பேரும் தன்னை பாலியல் தொழிலுக்கு அழைத்து மிரட்டல் விடுப்பதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார். மேலும் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, தன்னை மிரட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்... தன்னுடைய புகாரில் நடிகை தெரிவித்துள்ளதாவது:

பாலியல் தொழில்
"சில மாதங்களுக்கு முன்பு எனது பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எனது தோழி மூலம் அறிமுகமான சினேகா என்பவருடன் ராமாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சில காலம் வசித்து வந்தேன்.. அப்போது சினேகாவின் நண்பர்கள் பிரகாஷ், ரியா, நந்தினி ஆகிய மூன்று பேர் தனக்கு அறிமுகமானார்கள். திரைத்துறையில் சாதிக்க வேண்டும் எனவும் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில், பிரகாஷ் எனக்கு போன் செய்து பாலியல் தொழிலுக்கு அழைத்தார்.. அவ்வாறு வர மறுத்தால் என் மீதும் எனக்கு உதவிய நண்பர்கள் மீது பண மோசடி புகார் மற்றும் பாலியல் தொழில் புகார் அளிப்போம் என்று மிரட்டுகிறார்கள்" என்றார்.

சம்பிரதாயம்
விபச்சாரத்தில் எத்தனையோ நடிகைகள் கைதாகி உள்ளார்கள்.. ஆனால், யாருமே இதுவரை முழுமையான தண்டனையை அனுபவித்தது இல்லை.. மாறாக, உள்ளே போன வேகத்திலேயே திரும்பி வந்துவிடுவதுடன், இவர்களும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துடனேயே கொஞ்சம்கூட உருத்தலும், தயக்கமும் இல்லாமல் சகஜமாக நடமாடி கொண்டிருக்கிறார்கள்.. சினிமா என்றாலே இப்படித்தான் என்ற வழக்கமான சம்பிரதாயங்களை நொறுக்கினால் மட்டுமே, இந்த மலிவு சமாச்சாரங்கள் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.. பார்ப்போம்..!
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications