புற்றுநோயாளிகளின் சரணாலயம்! டாக்டர் சாந்தா நினைவு தினம் இன்று! யார் இவர்? கவுதமி புகழாரம்
சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அச்சமின்றி வாருங்கள் குணப்படுத்திவிடலாம் என நம்பிக்கையூட்டி, தன்னால் இயன்ற சிகிச்சைகளை மேற்கொண்ட மருத்துவர் சாந்தாவின் நினைவுதினம் இன்று என நடிகை கவுதமி இரங்கல் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக நிர்வாகியும் நடிகையுமான கவுதமி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: புற்றுநோய் என்றாலே எல்லோரும் அஞ்சி நடுங்கிய காலகட்டத்தில், 'அச்சமின்றி வாருங்கள்; குணப்படுத்திவிடலாம்' என்று நம்பிக்கையூட்டி, பல்லாயிரக்கணக்கான புற்றுநோயாளிகளுக்கு மறுவாழ்வளித்த அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சாந்தா அவர்களின் நினைவு தினம் இன்று!

டாக்டர் சாந்தா , புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சரணாலயமாகவும், அவர்களை நினைத்து அச்சத்தில் இருந்த அவர்களது குடும்பத்தாருக்கு நம்பிக்கை தரும் கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்தார்.
புற்றுநோய்க்கான மேம்பட்ட சிகிச்சை முறைகளை வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தி,
மருத்துவ சிகிச்சைக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்ததுடன், மருத்துவம் என்பது உயிர்காக்கும் சேவையாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார். இந்த உயிர்காக்கும் உன்னத சேவைக்காக, திருமணம் உள்ளிட்ட தனது தனிப்பட்ட வாழ்க்கை நலன்களைத் துறந்தார் டாக்டர் சாந்தா !
நம் தமிழ்நாட்டிற்கு ஆயிரக்கணக்கான திறமையான மருத்துவர்களையும் செவிலியர்களையும் உருவாக்கிக் கொடுத்த பெருமைக்கும் சொந்தக்காரர் டாக்டர் சாந்தா அவர்கள்!
புற்றுநோய் என்றாலே எல்லோரும் அஞ்சி நடுங்கிய காலகட்டத்தில்,
— Gautami Tadimalla (@gautamitads) January 19, 2026
‘அச்சமின்றி வாருங்கள்; குணப்படுத்திவிடலாம்’ என்று நம்பிக்கையூட்டி,
பல்லாயிரக்கணக்கான புற்றுநோயாளிகளுக்கு மறுவாழ்வளித்த
அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சாந்தா அவர்களின் நினைவு… pic.twitter.com/xutns81taf
இந்தியாவின் உயரிய விருதுகளாகத் திகழும் பத்ம விருதுகள் அனைத்தையும் பெற்றதுடன், ஆசியாவின் உயரிய விருதான மகசேசே விருதையும் பெற்றிருந்தாலும், பல விருதுகளை 'வேண்டாம்' என்று தவிர்த்து வந்தவர். விருதுகளுடன் வழங்கப்படும் ரொக்கப் பரிசுகளையும், தனக்கு தனிப்பட்ட முறையில் வழங்கப்படும் அனைத்து விதமான பரிசுகளையும்
புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்துக்கே பயன்படுத்தினார்!
டாக்டர் சாந்தா இன்று நம்முடன் இல்லையென்றாலும்,
அவர் நீரூற்றி வளர்த்த 'அடையாறு புற்றுநோய் நிறுவனம்'
லட்சக்கணக்கான புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையுடன் மறுவாழ்வளிக்கும் ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது! இவ்வாறு கவுதமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவரான வி.சாந்தா, சென்னை அடையாறு புற்றுநோய்க் கழகத்தின் தலைவராக பணியாற்றினார். அவர் சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜன 19ஆம் தேதி வயோதிகம் காரணமாக டாக்டர் சாந்தா தனது 94 ஆவது வயதில் மறைந்தார். இதுவரை பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்றார்.












Click it and Unblock the Notifications