திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடிக்கணும்.. கொந்தளிக்கும் நடிகை காயத்ரி ரகுராம்
Recommended Video
சென்னை இந்துக் கடவுள்களை அவதூறாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடிக்க வேண்டும் என்று பாஜக ஆதரவாளரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு சமீபத்தில் புதுச்சேரியில் நடந்தது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசும் போது, உச்ச நீதிமன்றம் அளித்த அயோத்தி வழக்கு தீர்ப்பை விமர்சனம் செய்தார். அத்துடன் பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர்.

திருமாவளவன் பேச்சு
"அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால், அந்த கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம்" என்று தொல்.திருமாவளவன் பேசியது சர்ச்சையானது.

இந்து அமைப்புகள்
இதனால் கோபம் அடைந்த இந்து அமைப்புகள் திருமாவளவனுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். சென்னை கிண்டி காவல் நிலையத்திலும் இந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டதாக திருமாவளவனுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருமா வருத்தம்
இதனிடையே தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், விசிக மகளிர் மாநாட்டில் நான் ஆற்றிய உரையில், ஒருசில சொற்கள் இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக உள்ளது என சிலர் என்னிடம் கூறினர். அவை உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். அதில் உள்நோக்கம் இல்லை; உண்மை உண்டு என்பதை எனது நண்பர்கள் அறிவர். எனினும், அதற்காக நான் வருந்துகிறேன் என கூறியிருந்தார்.
|
வலுக்கும் எதிர்ப்பு
இருந்த போதிலும் இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் பலர் சமூக வலைதளங்களில் திருமாவளவனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
|
திருமாவை
இந்நிலையில் நடிகையும் பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், திருமாவளவனை விமர்சித்து பல டிவிட்டுகளை வெளியிட்டுள்ளார. இந்துக்கள் அனைவரும் திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள் எனவும், திருமாவளவன் வருத்தம் தெரிவித்த போது கண்ணுல கிளசின் போடுங்க... நடிப்பு பத்தல எனவும் கமெண்ட் செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த விசிகவினர் அவரத வீடடை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதையு அவர் டுவிட் செய்துள்ளார். மேலும் அவருக்கு வரும் அழைப்புகள் குறித்து நேரலை செய்தும் இருந்தார்.
|
நேரடியாக சவால்
வரும் நவம்பர் 27ம் தேதி காலை 10 மணி அளவில் மெரினாவில் சந்திக்கிறேன். அப்போது என்னை திருமாவளவன் சந்தித்து விவாதிக்க தயாரா என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் திருமாவளவன் மீது போலீசில் புகார் அளிக்க உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் திருமாவளவன் மற்றும் அவரது கட்சியினரை கடுமையாக அவர் விமர்சித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications