தாலியை திருடிட்டு போய்ட்டாங்க.. பிக்பாஸ் சினேகனை நினைத்து கண்ணீர் விடும் கன்னிகா!
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட்டில் இருக்கும் சினேகனை நினைத்து கன்னிகா ரவி கண்ணீர் விடுகிறார். அது போல் சினேகனும் மனைவி கன்னிகாவை பிரிந்திருப்பதால் தினமும் கவலையில் உள்ளார்.
Recommended Video
கவிஞர் சினேகன் இவர் 2500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். சில படங்களிலும் நடித்துள்ளார். பாண்டவர் பூமி படத்தில் அவரவர் வாழ்க்கையில் பாடல் மிகவும் பிரபலம். அது போல் சாமி படத்தில் கல்யாணம்தான் கட்டிகிட்டு ஓடி போலாமா என்ற பாடலும் பிரபலமாகும்.
இது போல் ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். எனினும் இவர் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால்தான் பிரபலமடைந்தார். இவர் முதலிடத்தை பிடித்து பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ரன்னர் அப்
ஆனால் இவர் ரன்னர் அப் ஆனார். இதையடுத்து இவர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக கன்னிகா ரவியை காதலித்து வந்துள்ளார்.

பெற்றோர்களால் திருமணம் நிச்சயம்
இவர்களது திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு விமரிசையாக நடைபெற்றது. கமல்ஹாசன் தலைமை தாங்கி திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்தார். திருமணத்திற்கு பின்னர் சினேகன் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் சென்றுவிட்டார். அங்கு அவர் திடீரென கன்னிகாவை நினைத்து வருந்துகிறார்.

சினேகனிடம் கேட்ட சிம்பு
இதை ஒரு முறை நடிகர் சிம்புவே சினேகனிடம் கேட்டிருந்தார். "சினேகன் நல்லா விளையாடுகிறீர்கள், ஆனால் திடீர் திடீரென காணாமல் போய்விடுகிறீர்களே என்ன ஆச்சு, அவங்களை நினைத்து கஷ்டப்படுகிறீர்களா என கேட்டார். அதற்கு சினேகனும் ஆமாம் சார் கன்னிகாவை பிரிந்திருப்பது கஷ்டமாக இருக்கிறது என்றார்.

சினேகன்- கன்னிகா
சினேகன்- கன்னிகா தம்பதிக்கு 10 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருக்கிறது. எனினும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மிகவும் அன்னியோன்யமாக இருக்கிறார்கள். கன்னிகா தனது யூடியூப் சேனலில் சினேகனை நினைத்து நிறைய கவிதைகள், புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த யூடியூப் சேனலில் அண்மையில் கன்னிகா, ரசிகர்களுடன் உரையாடினார்.

யூடியூப் சேனல்
அப்போது அவர் இதுவரை எந்த பேட்டியிலும் சொல்லாத ஒரு விஷயத்தை இந்த யூடியூப் சேனல் உரையாடலில் கூறியிருந்தார் கன்னிகா. அவர் கூறுகையில், காதலை முதலில் சொன்னது சினேகன்தான். அதை ஏற்க எனக்கு 5 மாதங்கள் ஆயிற்று. ஒரு நாள் கார்த்திகை தீபத்தின் போது வீடு முழுவதும் அகல் விளக்கு ஏற்றி வைத்து அந்த ஒளியில்தான் என்னுடைய காதலை அவரிடம் சொன்னேன். அப்போது கையில் தாலி, மஞ்சள் கயிறுடன் போய் புரபோஸ் செய்தேன். அந்த தாலியை கையில் வைத்து சினேகன் போட்டோ எடுத்துக் கொண்டார். மிகவும் சென்டிமென்டாக இருவரும் அதை பத்திரமாக வைத்திருந்தோம். ஆனால் ஒரு நாளை அந்த தாலி திருட்டு போய்விட்டது. இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் அழுது கொண்டே இருந்தேன் என தனது சென்டிமென்ட்டை பகிர்ந்தார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications