நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு மிரட்டல்! ‘இசட்’ பாதுகாப்பு வழங்க வேண்டும்! நடிகை கஸ்தூரி கோரிக்கை!
சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இம்பீச்மென்ட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதியரசர் சுவாமிநாதனுக்கு தொடர்ந்து தேச விரோத சக்திகள் மிரட்டல் விடுத்து வருவதால், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மத்திய அரசின் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என நடிகை கஸ்தூரி வலியுறுத்தியுள்ளார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் மலை உச்சியில் உள்ள பழைய தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், நேரடியாக மலை உச்சிக்கு சென்று ஆய்வு செய்ததுடன், அங்குள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவின் பேரில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறை முன்வைத்து, மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது.

நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்
அதற்கு மேலாக, 144 தடையுத்தரவும் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பாஜகவினர், இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டு, திருப்பரங்குன்றத்தில் பெரும் பரபரப்பு உருவானது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், சமூக மற்றும் மத விவகாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும் தீர்ப்புகளை நீதிபதி வழங்கி வருகிறார் என இந்தியா கூட்டணி எம்.பிக்கள் குற்றம்சாட்டி இம்பீச்மெண்ட் நோட்டீஸ் கொண்டு வந்துள்ளனர்.
நடிகை கஸ்தூரி
இந்த நிலையில் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு தொடர் மிரட்டல்கள் வருவதால் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மத்திய அரசு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் நடிகை கஸ்தூரி. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," ஆம்பூரில் கூட இந்துக்களும் இஸ்லாமியர்களும் நல்லிணக்கத்தோடு இருக்கிறார்கள். இந்த இரு சமுதாயத்துக்கு இடையே தேவையில்லாத பிரச்சனையை திமுக தான் ஏற்படுத்துகிறது. திருப்பரங்குன்றத்திலும் இத்தனை ஆண்டுகளாக இந்து முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக தான் இருந்தனர். அரசியலுக்காக திமுக அவர்களுக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நீதியரசர் ஜிஆர் சுவாமிநாதன் மட்டுமல்ல, ஏற்கனவே பலமுறை இதே போன்ற தீர்ப்பு வந்திருக்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு இந்து பண்டிகைகள் மற்றும் இந்து கோவில்களுக்கு வேண்டுமென்றே பிரச்சனையை ஏற்படுத்தி எதிர்வினை ஆற்றுகிறது. எதற்கும் வளைந்து கொடுக்காத ஒரு நேர்மையான நீதி அரசரை தனிப்பட்ட முறையில் திமுகவும் அதன் கூட்டணி கட்சியும் குறி வைத்து அவதூறு பரப்பி வருகிறார்கள். இதன் மர்மம் என்ன என்று தெரியவில்லை.
இசட் பிரிவு பாதுகாப்பு
நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு மதுரையில் இருந்து சில தேச விரோத சக்திகள் சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டல் விடுத்து வருகின்றனர். மேலும் அவர் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் அவதூறு பரப்பி வருகின்றனர். எனவே மத்திய அரசு நீதியரசர் ஜிஆர் சுவாமிநாதனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தால் தமிழக மக்கள் தமிழ்நாடு அரசு மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார்கள்" என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications