நடிகை கஸ்தூரி "அப்படி" சொன்னதுமே.. திமுகவினர் மொத்தமா வந்துட்டாங்க.. யாரை பார்த்து என்ன வார்த்தை?
சென்னை: நடிகை கஸ்தூரி வழக்கம்போல், "பஞ்ச்" வைத்து ட்வீட் ஒன்றை போடவும், திமுகவின் உடன்பிறப்புகள் கொந்தளித்து போய் பதிலடிகளை தந்து கொண்டிருக்கிறார்கள்.. என்னவாம்?
திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தின் கொந்தளிப்பு இன்னமும் அடங்கவில்லை.. கைதான தினத்தன்றே, திமுக தரப்பில் கடுமையான ஆத்திரம் கிளம்பியது.

பாஜக மறுப்பு: செந்தில்பாலாஜியின் மனநிம்மதியை குலைக்கும்விதமாக செயல்படவேண்டிய அவசியம் என்ன? இது முழுக்க முழுக்க மனித உரிமை மீறிய செயல் என்று சாடியது. ஆனால், பாஜகவினர் இதற்கு தொடர்ந்து மறுப்பு சொல்லி வருகிறார்கள்.
பாஜகவின் மூத்த தலைவர் சீனிவாசன் ஒரு டிவி பேட்டியில் சொல்கிறார், "அமலாக்க துறைகள் ரெய்டுக்கு வரும்போது, நேர்மையாக நின்று ஏன் நிரூபிக்கவில்லை? தந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லையே.. மருத்துவமனையில், எதுக்கு கட்சிக்காரர்கள்? ஐசியூ,வில் நெஞ்சுவலி என்று அட்மிட் ஆகியிருக்கும்போது, கட்சிக்காரர்கள் போய் பார்த்தால், நெஞ்சுவலி அதிகமாகிவிடாதா? இது எப்படி மனித உரிமை மீறல்னு சொல்கிறீர்கள்? என்று கேட்டிருந்தார்.
வீடியோ பதிவு: இதில், ஒருபடிமேலே சென்று, பாஜகவின் திருப்பதி நாராயணன் கிண்டலடித்திருந்தார்.. இதையடுத்து, நிறைய ட்வீட்களையும், வீடியோவையும் பேசி பதிவிட்டிருந்தார்.
அந்த ட்வீட்டில், "செந்தில்பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டத்திற்குட்பட்டு நடந்து கொள்ளாவிட்டால், அறிவாலயத்தில் மானம் சந்தி சிரிக்கும். அ.ராசா, கனிமொழி கைதுகளின்போது கூட இவ்வளவு அலப்பறை இல்லை.. திமுக நடத்தும் நாடகம் வெட்கக்கேடானது.. திராவிட மாடல்.. திரைக்கதை, வசனம், நடிப்பு சுமார் தான். "அய்யோ அய்யய்யோ.. கொலை பண்ணுறாங்க..." என்ற காட்சி இடம் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்" என்று விமர்சித்திருந்தார்.
கஸ்தூரி: இந்த வரிசையில், சமூக செயற்பாட்டாளரும், பிரபல நடிகையும், துணிச்சல் பெண்மணியுமான கஸ்தூரியும் இணைந்தார். புது புது பழமொழிகளை பதிவிடவும், அத்தனையும் ட்விட்டர்வாசியின் கவனங்களை ஈர்த்திருந்தது..
"முற்பகல் கட் செய்யின் பிற்பகல் ரெய்டு விளையும்.
CurrentCut வரும் முன்னே, raid வரும் பின்னே.
ரெய்டு வரும் முன்னே, நெஞ்சுவலி வரும் உடனே.
இடுக்கண் வருங்கால் நகுக. இன்கம்டாக்ஸ் ரெய்டு வருங்கால் அழுக.
பிரிக்க முடியாதது அரசியல்வாதியும் நெஞ்சுவலியும்.
பிரியகூடாதது பாட்டிலும் பத்து ரூபாயும்" என்றெல்லாம் கஸ்தூரி பதிவிட்டிருந்த பழமொழிகள், அன்றைய தினம் இணையத்தில் டிரெண்ட் ஆகிவிட்டது என்றே சொல்லலாம்..
We have 'leaders' who unconditionally apologise to SC in order to avoid arrest . We have many more 'leaders' who get chest pain facing arrest . "Brave' netas who apply every trick in the book to avoid even a day in jail have the audacity to comment on Savarkar !!
— Kasturi (@KasthuriShankar) June 17, 2023
சாவர்க்கர்: இதையெல்லாம் பார்த்து திமுகவினர், ஆவேசமானார்கள்.. பதிலடிகளை தந்தார்கள். ஆனால் கஸ்தூரி மீண்டும் ஒரு ட்வீட்டை பதிவிட்டு, உடன்பிறப்புகளை சீண்டியுள்ளார்.. அதில், "கோர்ட்டில் அதட்டியதும் கைதை தவிர்க்க, உடனே மன்னிப்பு கேட்பதை ஜெயிலுன்னு சொன்னாலே, நெஞ்சை பிடித்து கொள்வதை போலீஸை பார்த்ததும், அய்யோ கொல்றாங்கன்னு கத்துவதை வரலாறாக கொண்டவர்கள் வீர சாவர்க்கரை கோழை என்பதெல்லாம்.." என்று பதிவிட்டுள்ளார்..
அமித்ஷா: ஏற்கனவே கடுப்பில் இருந்த திமுகவினரோ, "அப்படின்னா, மன்னிப்பு கடிதம் எழுதுனது எதுல வரும்னு சொல்லுங்க" என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அத்துடன், அமித்ஷா அன்று கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட போட்டோவையும் கொண்டுவந்து, கஸ்தூரி ட்வீட்டில் பதிவிட்டு, பதிலடிகளை தந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் கஸ்தூரியின் ட்விட்டர் களமே தகதகன்னு தகித்து காணப்படுகிறது..!!
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications