நடிகை கஸ்தூரி "அதை" சொன்னதுமே.. திரண்டு வந்த திமுகவினர்.. "பாருங்க, அவரு ஸ்டிக்கரை ஒட்ட பாக்கறாரே"
சென்னை: பிரபல நடிகை கஸ்தூரி, திமுக அமைச்சர் உதயநிதியை சீண்டி உள்ளார்.. அத்துடன் ட்வீட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த மக்களுக்கு நிவாரணப் பணிகளையும், தேவையான நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக, விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ உதவி உள்ளிட்ட மற்ற உதவிகளை செய்வதற்காகவும், மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ்நாட்டை சேர்ந்த விபத்தில் காயமடைந்த மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் தேவையான உதவிகளை செய்வதற்காகவும், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் அதிகாரிகளை கொண்ட குழு ஒடிசா சென்றது.

நிவாரண பணி: அரசு ஹெலிகாப்டர் மூலம் அமைச்சர்கள் ஒடிசா சென்றிருந்தனர்.. அங்கு அதிகாரிகள் குழு விபத்து நடந்த பாலசோரில் கன்ட்ரோல் ரூமுக்கு சென்றனர்.. அமைச்சர்கள் விபத்து நடந்த இடத்தில் உள்ள நிலவரங்களையும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளையும் கண்காணித்தனர்.. பிறகு, முதல்வர் ஸ்டாலினிடம் வீடியோ கால் மூலம் கள நிலவரத்தை உதயநிதி எடுத்துரைத்திருக்கிறார்.. முதலமைச்சரும் விவரங்களை உதயநிதியிடம் ஒவ்வொன்றாக கேட்டறிந்தார்..
விபத்தில் சிக்கியவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களை அடையாளம் காணவும், அவர்களை தமிழகம் அழைத்து வரவும், உதயநிதி சென்றிருந்த நிலையில், பிரதமர் வருகையை காரணம்காட்டி அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால் அந்த பகுதிகளை பார்வையிட முடியவில்லை. அதனால், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை மட்டும் சந்தித்து விட்டு தமிழகம் திரும்பினார்.
ஜெயக்குமார்: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, தங்களுக்கு முன்பாகவே ஒடிசா அரசு தமிழர்களை மீட்டு விமானம் மூலம் அனுப்பி வைத்து விட்டது என்றார்.. அத்துடன், அங்கு என்ன நடந்தது என்பது குறித்தும் விரிவாக செய்தியாளர்களுக்கு விளக்கி சொன்னார்..

ஆனால், இந்த விவகாரத்தில் உதயநிதியின் செயல்பாடுகளை, அதிமுக தரப்பு விமர்சித்திருந்தது.. அதுவும் உதயநிதி என்றதுமே, ஜெயக்குமார் வழக்கம்போல், முந்திக்கொண்டு வந்து முதல்நபராக விமர்சித்து விட்டு போனார்..
கூலிங் கிளாஸ்: "இங்கிருந்து போனாங்களே, ஆனால் சம்பவ இடத்துக்கே போகலை.. பிரதமர் வருகையை காரணம் காட்டி விடவில்லை என்பதெல்லாம் முதல்வரின் மகன் காரணமாக சொல்லலாமா?அதையெல்லாம் ஏத்துக்க முடியாது.. என்னமோ டூர் போய்வந்ததை போல, போயிட்டு வந்திருக்கிறார். ஒரு துயர சம்பவத்திற்கு போகும்போது, இப்படித்தான் கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு போவதா?
ஷூட்டிங் போவது போல போய் வந்திருக்கிறார். கூலிங் கிளாஸ் போட்டுக்கலாம், தப்பில்லை.. அவங்க தாத்தாவும் போட்டிருக்காரு.. முதலமைச்சரும் போட்டிருக்காரு.. ஆனால், ஏதோ ஃபேமிலி டூர் போயிட்டு வந்தது போல தான் இருக்கிறது" என்று சீறியிருந்தார் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்.

கஸ்தூரி அதிரடி: இந்நிலையில், பிரபல நடிகையும், சமூக ஆர்வலரும், எப்போதுமே "வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு" என்று துணிச்சலுடன் பேசக்கூடிய கஸ்தூரியும், உதயநிதியை விமர்சித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.. அத்துடன், உதயநிதியின் உடல்மொழியையும் கிண்டல் செய்துள்ளார்.
அதில், "சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னை மாற்றிக் கொள்கிறார். உற்று கவனித்தால், ரயில் விபத்து மீட்புப்பணிகள் குறித்து ஒட்டமுடியாத தங்களது கட்சியின் ஸ்டிக்கரை ஒட்ட முயற்சிக்கிறார் என்பது விளங்கும்" என்று விமர்சனம் செய்துள்ளார். இதற்கு ட்விட்டர்வாசிகள் திரண்டு வந்து, கஸ்தூரியின் ட்வீட்டை வரவேற்றுள்ளனர்.. ஆமோதித்துள்ளனர்.
வன்மம் கக்கப்பட்டது: ஆனால், பலரும் இதை விமர்சித்துள்ளனர்.. "வன்மம் கக்கப்பட்டது.. சாவிலும் அரசியலா? கேட்டால் நடுநிலைவாதி என்று சொல்லிக்கொள்வதா? இந்த விஷயத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி உதவ முன் வந்ததற்கு இவருக்கு நாம் நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும்.. இவர் மந்திரியா? அமைச்சரா? என்பது அப்பாற்பட்ட விஷயம்.. மனிதநேயத்துடன் செயல்பட்டமைக்காக வாழ்த்துவோம்.. பிரதமரின் வருகைக்கு இவர்களுக்கு தடை சொன்னது வருத்தம்தான் என்று பதிவிட்டு வருகின்றனர்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications