CurrentCut வரும் முன்னே, raid வரும் பின்னே.. செந்தில் பாலாஜி கைதுக்கு கஸ்தூரி கிண்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரண்ட் கட் வரும் முன்னே, ரெய்டு வரும் பின்னே என அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து நடிகை கஸ்தூரி கிண்டல் செய்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சி காலத்தில் 2011- 2015ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 81 பேரிடம் பல லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டது.

இந்த வழக்கை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கிடைத்துவிட்டதாகவும் சமரசமாக செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இதை ஏற்று செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. ஆனால் வழக்குப் பதிவு செய்யாத மத்திய குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி ஊழல் தடுப்பு அமைப்பு மனு தாக்கல் செய்தது.

அது போல் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரியும் செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் அமலாக்கத் துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து அமலாக்கத் துறை விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் வீட்டில் நேற்று அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இந்த 17 மணி நேர சோதனை நிறைவடைந்ததை அடுத்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் விசாரணைக்கு மறுப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்துதான் நாங்கள் உங்களை கைது செய்கிறோம் என தெரிவித்தனர்.

Actress Kasthuri teases Senthil Balajis arrest

இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் கைதுக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். செந்தில் பாலாஜியை யாரும் பார்க்க அனுமதி அளிக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் கைது குறித்து நடிகை கஸ்தூரி கூறுகையில் புதிய பழமொழிகள்- கற்பனை
நான் நான் நானேதான் பின்னே மண்டபத்துல யாரும் எழுதி குடுத்தாங்களா என்ன.

முற்பகல் கட் செய்யின் பிற்பகல் ரெய்டு விளையும்.
CurrentCut வரும் முன்னே, raid வரும் பின்னே.
ரெய்டு வரும் முன்னே, நெஞ்சுவலி வரும் உடனே.

கஸ்தூரியின் latest பழமொழிகள்
Cont
இடுக்கண் வருங்கால் நகுக.
இன்கம்டாக்ஸ் ரெய்டு வருங்கால் அழுக.
பிரிக்க முடியாதது
அரசியல்வாதியும் நெஞ்சுவலியும்.
பிரிய கூடாதது
பாட்டிலும் பத்து ரூபாயும். இவ்வாறு கஸ்தூரி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+